ஆய்வு

குழு ரீதியான, மத்ஹப் ரீதியான, இன ரீதியான கோடுகளைக்கொண்டு புதிய மத்திய கிழக்கிற்கான வரைபடம்

ஆய்வு 21 ஜனவரி 2016

 

இலங்கையில் ஷியாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அண்மைக்காலமாக ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தை முன்னைய காலங்களுடன்

 

எது பிரச்சனை? - கல்லால் எறிந்து கொல்வதா?, சவூதி அதை நிறைவேற்றுவதா? அல்லது ஒட்டுமொத்த ஷரீஆவா?

ஆய்வு 14 டிசம்பர் 2015

 

சவூதி அரேபிய நீதிமன்றம், கல்லால் எறிந்து கொல்லும்படி தீர்ப்பளித்த இலங்கைப் பெண்ணின் வழக்கை விசாரணைக்காக மீண்டும் திறந்துள்ளதை எம்மில் அனேகர்


அறிந்திருப்போம். வழக்கில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம் அந்தப்பெண்ணின் மீட்சிக்காக உழைத்து வரும் பலருக்கும் ஆறுதல் அளித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா இது குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதுசட்டவல்லுனர்களின் ஆலோசணையின் விளைவாகவும், எமது நேரடித்தலையீட்டின் விளைவாகவும் இந்த வழக்கை மீளத்திறப்பது என்ற ஒரு நிலை எட்டப்பட்டிருக்கிறது. இதனை நாங்கள் ஒரு வெற்றியாகக் கருதுகிறோம். மேலும் இந்தத் தீர்ப்பை மாற்றுவதற்கான முழுமையான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

தான் ஒரு இலங்கை ஆடவருடன் தகாத தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான 45 வயது நிரம்பிய பணிப்பெண்ணுக்கு ஷரீஆவின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக கூறப்படும் இத்தீர்ப்பு நாட்டில் ஷரீஆ தொடர்பாகவும், குறிப்பாக ஷரீஆவின் ஹுதூத் - குற்றவியல் தண்டனை முறையின் ஏற்புடைமை குறித்தும் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பல்வேறு பின்னணி கொண்ட தரப்புக்களும், மக்களும் இது குறித்து விவாதிக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத் தலைமைகளும் இதற்கு எதிர்வினை ஆற்றி வருகின்றார்கள்.

குறிப்பாக பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் எம்பிக்கும் ரிஷாத் பத்தியுத்தீன் போன்ற மேலும் சில முஸ்லிம் எம்பிக்களுக்குமிடையே ஷரீஆ சட்டம் தொடர்பான காரமான தர்க்கங்கள் ஏற்பட்டமையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதே போன்று சில உலமாக்கள் மஹ்ரம் இல்லாத நிலையில் தமது நாடுகளுக்குள் பணிப்பெண்களாக வருகின்றவர்களை அனுமதிக்கின்ற சவூதி போன்ற வளைகுடா நாடுகள் எவ்வாறு தவறுகள் நடைபெறும்போது மட்டும் கடுமையான சட்டங்களை விதிக்க நினைக்கின்றன, இது ஷரீஆவின் ஒழுங்கான பிரயோக முறைக்கு எதிரானதாகும் என விமர்சிக்கின்றனர். இன்னொருபுறம் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் குடையமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறீலங்கா (MCSL) தவறிழைத்த ஆணையும், பெண்ணையும் அவர்களின் குறைந்த கல்வியறிவு, பொருளாதார நிலை என்பவற்றைக் கருத்திற்கொண்டு கருணை அடிப்படையில் மன்னித்து இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்து, சவூதி மன்னருக்கு கடிதம் அனுப்பி வைக்கிறது. இவ்வாறு பலமுனைகளில் இப்பிரச்சனைக்கான எதிர்வினைகளை நாம் காண்கிறோம். எனவே இந்த விவகாரத்தின் உண்மையான யதார்த்தம் என்ன? அதனை நாம் எவ்வாறு நோக்க வேண்டும் என்பது தொடர்பாக முஸ்லிம் சமூகம் தெளிந்த நிலையில் இருப்பது மிகவும் இன்றியமையாததாகும். ஏனெனில் இத்தகைய பிரச்சனைகள் இந்தப்பெண்ணின் விவகாரத்துடன் மாத்திரம் முற்றுப்பெறப்போவதில்லை.

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாக, சாரதிகளாக பயணிக்கின்றவர்களால் இலங்கைக்கு கிடைக்கின்ற வெளிநாட்டு செலாவணி ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாகும். இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி 2014ஆம் ஆண்டில் மாத்திரம் 279,952 பேர்கள் அங்கே வேலைக்காக சென்றிருக்கின்றனர். இதனூடாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைத்துள்ளதுடன் இது மொத்த GDPயில் 9 சதவீதமாகும். இந்த புள்ளிவிபரத்தை மாத்திரம் எடுத்துப்பார்த்தால் இலங்கை இந்த வருமான மூலத்தை இத்தகைய ஓரிரு வழக்குகளால் மாத்திரம் முடக்கிவிடாது என்பது தெளிவான விடயமாகும். எனவே இதுபோன்ற பல சர்ச்சைகளை நாம் எதிர்காலத்திலும் எதிர்நோக்கக்கூடும். எனவே ஷரீஆவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூகம் என்றவகையில் அரசியல் சமூக நிர்ப்பந்தங்களுக்காக எதிர்வினையாற்றாது. பிரச்சனையும், அதனைச்சூழவுள்ள களநிலையையும், இஸ்லாத்தின் தூய்மையான நிலைப்பாட்டையும் அடிப்படையாக வைத்து இத்தகைய சவால்களை முகம்கொடுப்பதற்கு எமக்கு மத்தியில் துல்லியமான ஒரு பார்வை முன்கூட்டியே உருவாகியிருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

அந்தவகையில் இஸ்லாத்தின் பார்வையில் இந்த பிரச்சனையை சீர்தூக்கிப் பார்ப்போமானால் இதிலே இரண்டு முக்கிய விடயங்கள் தெளிவாக ஆராயப்படவேண்டும். ஒன்று இந்தப்பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் பின்னணி; பற்றியது. இரண்டாவது இந்தத் தீர்ப்பினை அடிப்படையாக வைத்து ஷரீஆவின் மீது எழுப்பப்பட்டுள்ள விமர்சனம் பற்றியது. இந்த இரண்டு பரிமாணங்களையும் மிகச் சரியாக புரிந்து கொள்வது முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் சரியானதொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஏதுவாக அமையும். முதலில் இந்தத் தீர்ப்பின் பின்னணி பற்றி மிகச் சுருக்கமாக ஆராய்வோம்.

தீர்ப்பின் பின்னணி

கல்லால் எறிந்து கொல்லும்படி தீர்ப்பளிக்கப்பட்ட இந்த பணிப்பெண்ணைப் பொருத்தமட்டில் அந்தப்பெண் சவூதிக்கு தனது சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே சென்றிருக்கிறார். சவூதியில் வாழ்கின்றபோது அந்த நாட்டின் சட்டங்களுக்கு அவர் கட்டுப்பட்டவர் என்பது அவருக்கு தெரியாதிருக்க வாய்ப்பில்லை. அல்லது அது குறித்து அவருக்கு அறிவூட்டியிருக்க வேண்டியது அவரை அங்கு அனுப்பிய முகவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கும் உரிய கடமையாகும். எனவே இந்தக்கட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டிய நிலையில் அந்த நாட்டில் மிகவும் பாரதூரமான தண்டனையை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு செயலில் அவர் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்றால் அவர் தனக்குத்தானே தீங்கிழைத்திருக்கிறார் என்றே நாம் கருதவேண்டியிருக்கிறது.

மேலும் இலங்கையரசு சவூதி போன்ற நாடுகளுடன் வேலைவாய்ப்பு தொடர்பான மிகத்தெளிவான ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டதன் அடிப்படையிலேயே நீண்ட காலங்களாக பணியாளர்களாக தனது பிரஜைகளை இந்த நாடுகளுக்கு அனுப்பி வருகின்றது. பலகோடி டொலர்கள் வருமானத்தை நாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய இந்த வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதில் கரிசனை காட்டும் இலங்கை அரசு அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளையும் கருத்திற்கொள்ள தவறியிருக்கக் கூடாது. மேலும் எவ்வாறு இலங்கைக்குள் நுழையும் ஒரு வெளிநாட்டவர் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அவரைத்தண்டிக்கும் உரிமை இலங்கைக்கு இருக்கின்றதோ அதே போன்ற தெளிவான ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஏனைய நாடுகளுக்குள் நுழைகின்ற இலங்கைப் பிரஜைகளுக்கும் பிற நாடுகள் தண்டனைகளை வழங்குகின்ற உரிமையில் இலங்கை தலையிடுவது நடைமுறையில் ஏற்புடையதல்ல. எனவே இந்தப்பணிப்பெண் மீதான தீர்ப்பையோ அல்லது இதுபோன்ற தீர்ப்புக்களையே எம்மால் தவிர்க்க முடியாது. ஏனெனில் அனைத்தும் இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட நியமங்களின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளன. வேண்டுமெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான நற்புறவை முன்வைத்து தனது நாட்டுப்பிறஜைக்காக கருணை மனுவை இலங்கை வேண்டலாம். அதனைத்தான் இலங்கை செய்தும் இருக்கிறது. எனினும் அதனை ஏற்றுக்கொள்வதோ நிராகரிப்பதோ எம் கையில்லை. எனவே இலங்கை அடிப்படையிலேயே இவ்விடயத்தில் பலகீனமான ஒரு புள்ளியில் நிற்கிறது.

மறுபக்கம் சவூதி நாட்டுச் சட்டத்தின் படியும், அதற்கும் இலங்கை அரசுக்கும் இடையே காணப்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையிலும் சவூதி நீதிமன்றம் இத்தகையதொரு தீர்ப்பை வழங்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கு பூரண உரிமையிருக்கிறது. எனினும் அந்த தீர்ப்பை இஸ்லாத்தை அல்லது ஷரீயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வழங்குகின்ற உரிமை சவூதி அரேபியாவுக்கு இருக்கிறதா என்ற கேள்வியை நாம் நேர்மையாக எழுப்பினால் அந்தக் கேள்விக்கு மிகத்தீர்க்கமாக இல்லை என்ற பதிலையே இஸ்லாம் சொல்லும். ஏனெனில் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமையை இஸ்லாம் பைஆவின் ஊடாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கலீஃபாவிற்கே உரித்தாக்கியிருக்கிறது. அந்த கலீஃபா கிலாஃபத்தையே பிரதிநிதித்துவப்படுத்துவார். மாற்றமாக சவூதின் குடும்பத்தையோ அல்லது அவர்களின் முடியாட்சியையோ பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார். மேலும் ஒரு தேசம் இஸ்லாமிய தேசமாக (தாருள் இஸ்லாமாக) இனம் காணப்படுவதற்கு குறைந்தபட்சம் அத்தேசம் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்கவேண்டும். ஒன்று அது இஸ்லாமிய ஷரீஆவை எந்தவித கூடுதல் குறைவுமின்றி, மனிதச்சட்டங்களினதோ அல்லது ஏனைய சட்டங்களினதோ எவ்வித கலப்பும் இல்லாத நிலையில் அமூல் செய்ய வேண்டும். இந்த நிபந்தனையில் சவூதி முழுமையான கோட்டையை விட்டுவிடுகிறது. ஏனெனில் அது தம்மை ஒரு இஸ்லாமிய தேசமாக காட்டிக்கொள்வதற்காக சம்பிரதாய பூர்வமான சில ஷரீஆ நடைமுறைகளைக் கடைப்பிடித்தாலும் அதனது அரசியலமைப்புத்தொடக்கம் நடைமுறை முறைமைகள் வரை அனைத்தும் சடவாத தேசிய நாடுகளையே பிரதிபலிக்கின்றன. அதன் பொருளாதாரம் தொடக்கம் அரசியல் மற்றும் வெளிநாட்டுக்கொள்கைகளை ஆராயும் ஒருவருக்கு இது மிகத் தெளிவாக புலப்படும்.

இரண்டாவது நிபந்தனைதான் அதன் பாதுகாப்பு பிறரின் அல்லது பிற தேசங்களின் கைகளில் இருக்காது முழுமையாக முஸ்லிம்களின் கைகளினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த நிபந்தனையும் மிகத்தெளிவாக சவூதி பூர்த்தி செய்யவில்லை. அது இன்று அமெரிக்காவின் இறக்கைகளுக்குள்ளும், நேற்று அதன் உருவாக்கிகளான பிரித்தானியாவின் இறக்கைகளுக்குள்ளும் ஒழிந்து கொள்வதும், கொண்டதும் இதனையே காட்டுகிறது. எனவே பிரித்தானிய படைப்பான சவூதியின் குடும்ப ஆட்சிக்கு முஸ்லிம்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஹஜ்ஜுக்கு வருபவர்களுக்கு நீர் புகட்டுவதையும், உலகம் முழுக்க குர்ஆனை அச்சிட்டு விநியோகிப்பதையும் செய்வதைப்போலவேதான் ஹுதூத் தண்டனை முறையையும் சவூதி பாவித்து வருகின்றது. அதனைக்கூட பெரும்பாலும் நாட்டில் பலகீனமான நிலையில் இருப்பவர்கள் மீதே அது பிரயோகித்து வந்திருக்கிறது. மேலும் தமது நாட்டுக்குள் உள்நுழையும் பலகீனமான தேசத்தவர்களுக்குத்தான் அந்தத்தண்டனை பிரயோகிக்கப்பட்டும் வருகின்றது. எனவே சவூதியின் குற்றவியல் தண்டனை முறைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதத் தொடர்வுமில்லை. மாறாக அது தனது நியாயாதிக்கத்திற்காகவும், பிற நாடுகளைப்போல தனது தேசிய நலன்களுக்காகவுமே அதனைப்பயன்படுத்துகிறது. எனவே சவூதியை ஒரு இஸ்லாமிய தேசமாகக் கருதி, இந்தத்தீர்ப்பு ஷரீஆவின் தீர்ப்பாகக் கருதி அதனடிப்படையில் அதனை பாதுகாத்து கருத்துச்சொல்ல வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிமுக்கும் இல்லை.

இன்று சட்ட ரீதியான கிலாஃபா உலகின் எந்த மூளையிலும் இல்லாததால் சவூதி போன்ற தேசங்களுக்கோ அல்லது இஸ்லாமிய அரசு(IS), போகோ ஹராம் போன்ற இராணுவக் குழுக்களுக்கோ ஹுதூத் தண்டனைகளை பிறரில் அமூல்படுத்தும் உரிமையை இஸ்லாம் வழங்கவில்லை.

எனினும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையான கிலாஃபத்தை மீளுருவாக்கும் பணி பூர்த்தியாகின்ற போது, உண்மையான ஒரு கிலாஃபா ஆட்சி தோன்றுகின்ற போது, அது இஸ்லாமிய தண்டனை முறை உட்பட முழுமையாக ஷரீஆ சட்டங்களை தனது எல்லைக்குள் நடைமுறைப்படுத்தும்போது, இறைவனின் தீர்ப்புகளான ஷரீஆ சட்டத்தின் உண்மையான அருளை உலகம் புரிந்து கொள்ளும்.

இனி இந்தப்பிரச்சனையின் இரண்டாவதும் எம்மைப்பொருத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான அம்சத்திற்கு வருவோம். அதாவது இத்தகைய தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய ஷரீஆவை விமர்சனம் செய்யும் அல்லது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் தரப்புக்களை எதிர்கொள்வது பற்றியது.

சாதாரணமாக ஒருவர் பிற நாட்டிலே அந்நாட்டின் சட்டத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டால் அவரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபித்து, அவருக்கு தண்டனை வழங்குவது ஒரு ஆச்சரியமான விடயமல்ல. சில பொழுதுகளில் அத்தண்டனைகள் மிகக்கடுமையானதாக இருக்கின்றபோது தத்தமது நாட்டு பிறஜைகளை மீட்டெடுப்பதற்கு அரசாங்கங்கள் முயற்சிப்பதும் நடைமுறையில் இல்லாத ஒரு விடயமுமல்ல. எனினும் இந்த முயற்சிகளுக்கும், அதன் மீதான கவனயீர்ப்புகளுக்கும் ஒரு எல்லையுண்டு. ஆனால் அந்தத் தண்டனைகளை ஷரீஆவின் அடிப்படையில் வழங்குகிறோம் என யாரேனும் பெயரளவுக்கேனும் கோரினால் அந்த தீர்ப்புகளுக்;கெதிரான அணிசேர்ப்புகளும், உயர்மட்ட தலையீடுகளும், சர்வதேச ஊடகங்களின் கவனமும் எல்லையற்ற நிலையில் குவிக்கப்படும் சூழலை நாம் அவதானிக்கிறோம். இந்த கவனயீர்ப்புக்களையும், தலையீடுகளையும் சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை சம்பந்தப்பட்ட குற்றச்செயல் பற்றியோ அல்லது தீர்ப்பளிக்கப்பட்ட நபரை மீட்டெடுப்பது பற்றியோ இருக்கின்ற உண்மையான அக்கறையைவிட ஷரீஆவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டிற்கு ஆதாரம் தேடும் முயற்சிகளாகவும் அல்லது தமது ஷரீஆவுக்கு எதிரான காழ்ப்புணர்வை கொப்பளிக்கும் முனைப்புக்களாகவுமே பல சந்தர்ப்பங்களில் காட்சி தருகின்றன. எனவே இத்தகைய தண்டனைகள் குறித்து எதிர்வினையாற்றுகின்ற எவரும் இஸ்லாத்திற்கு எதிராக இன்று உலகில் தொடுக்கப்பட்டுள்ள அறிவார்ந்த போராட்டத்தின் பரிமாணத்தையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.

இந்தப்பெண்ணின் தீர்ப்பைச் சூழ்ந்து எழுந்த சர்ச்சையிலும் இதன் பாதிப்பு இல்லாமலில்லை. மேற்குலகைப்போல இஸ்லாத்திற்கு எதிரான அறிவார்ந்த போராட்டத்தில் இலங்கை அரசோ அல்லது பெரும்பான்மையான மக்களோ குறிப்பிடத்தக்களவில் ஈடுபடாவிட்டாலும் இஸ்லாத்திற்கு எதிராக உலகில் உருவாகியிருக்கும் நச்சுப்பிரச்சாரங்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் சுயநலமிகளும், இயக்கங்களும், ஊடகங்களும் இலங்கையில் இருக்கவே செய்கின்றன. மேலும் அவை மக்களின் பொதுக்கருத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் புரக்கணிக்ககூடியதல்ல. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில நாடுகள் ஷரீஆவை முறைகெட்டு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதற்காகவோ அல்லது ஷரீஆவின் சில நிலைப்பாடுகள் இன்றைய உலக நியமங்களுக்கு மாற்றமாக இருக்கின்றன என்பதற்காகவோ இஸ்லாமிய ஷரீஆவுக்கு எதிரான விசமப்பிரச்சாரங்களை யாரேனும் முன்வைத்தால் அதனைக்கண்டும் காணாதது போல் இருப்பதும், அல்லது ஷரீஆவுக்கு வலிந்து மறுவிளக்கம் கொடுத்து இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து ஷரீயத்தை பாதுகாக்க நினைப்பதும் அல்லது தமது அரசை அல்லது பெரும்பான்மை மக்களை திருப்த்திப்படுத்த வேண்டும் என்ற மனோநிலையுடன் செயற்படுவதோ மிகவும் ஆபத்தானதாகும். இவை அனைத்தும் தோற்கடிக்கப்பட்ட மனோபாவத்தின் வெளிப்பாடாகும். மாறாக ஷரீஆ என்பது ஏக இறைவனிடமிருந்து வந்த தூய வழிகாட்;டல் என்பதையும், அதில் மாத்திரம்தான் தீர்வு இருக்கிறது என்ற அறிவார்ந்த நிலைப்பாட்டையும் முன்வைத்து இத்தகைய போலிக்குற்றச்சாட்டுக்களை தவிடுபொடியாக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இஸ்லாத்தை அரசுக்கும், ஏனைய மக்களுக்கும் தெளிவாக முன்வைக்க முடியாத வகையில் போடப்பட்டிருக்கம் போலித்திரைகள் கிழிக்கப்பட்டு நேர்மையாக ஷரீஆவின் நிலைப்பாடுகள் முழு நாட்டுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த வழிமுறையே நேர்மையான கருத்தாடலும், தூய்மையான சவவாழ்வும் சமூகங்களுக்கு மத்தியில் தோன்றுவதற்கு வழிகோலும். மேலும் இதனூடாக மாத்திரம்தான் காலத்துக்கு காலம் உருவாகும் இவ்வாறான சர்ச்சைகள் வெறுமனவே உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டோ அல்லது மேலோட்டமான புரிதல்களின் அடிப்படையாக்கொண்டோ அணுகப்படாமல் அறிவார்ந்த அடிப்படையிலும் நிரந்தரத் தீர்வுகளை எட்டும் குறிக்கோளுடனும் அணுகப்பட்டு இத்தகைய சர்ச்சைகள் மீண்டும் மீண்டும் எழாமல் தவிர்க்க முடியும்.

ஷரீஆவுக்கு எதிரான போலிப்பிரச்சாரத்தின் சூத்திரதாரி மேற்குலகே

மதஒதுக்கல் கொள்கைதான் (Secularism) உலகை உய்கிக்க ஒரேயொரு வழி என பறைசாட்டும் மேற்குலகைப்பொருத்தமட்டில் அது, இறைவேதத்தின் அடிப்படையில் முழு வாழ்வுக்கான தீர்வுகளை கூறும்; இஸ்லாமிய சித்தாந்தத்தை எதிர்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றது. ஏனெனில் மேற்குலகால் உலகில் காணப்படும் எந்தவொரு பிரதான பிரச்சனைகளுக்கும் இன்றுவரை அறிவுபூர்வமான தீர்வுகளை முன்வைக்க முடியவில்லை. அவற்றை பூசி மொழுகும் வேலையைத்தவிர பிரச்சனைகளை நிரந்தரமான தீர்ப்பதற்கு அதனால் முடியவில்லை. அது அரசியல் தொடக்கம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சரியே. குறிப்பாக மேற்குலகு முன்வைக்கும் மனிதச்சட்டங்களால் எந்தவொரு குற்றச்செயலையும் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியவில்லை. ஒழிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதனைக்கட்டுப்படுத்தக்கூட முடியவில்லை. குற்றவாளிகளின் அதிகரிப்பினால் தமது சிறைச்சாலைகளை அதிகரிப்பதிலும், விஸ்தரிப்பதிலும்தான் அது வெற்றி கண்டு இருக்கின்றது. எனவே ஷரீஆவின் பிரயோகம் பற்றியும், அதன் குற்றவியல் சட்டங்களின் பிரதிபளிப்புக்கள் பற்றியும் வாயைத்திறப்பதற்கு கூட அதற்கு அருகதையில்லை. அந்த உண்மை அதற்கு தெரியாத விடயமுமல்ல. மாற்றமாக ஷரீஆ பல நூற்றாண்டுகளாக உலகில் அமூலில் இருந்த காலத்தின் ஆரோக்கியமான சமூக அடைவுகளை அவர்கள் புரியாதவர்களும் அல்ல. எனினும் மேற்குலக நாகரீகத்திற்கும் இன்று மீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கும் இடையிலான மிகக்கடுமையான ஒரு போராட்டம் இடம்பெற்று வருவதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எனவே இஸ்லாத்திற்கு எதிராக தாம் முன்னெடுக்கும் இராணுவ முன்னெடுப்புக்களைப்போலவே அறிவார்ந்த மற்றும் கலசார யுத்தத்தையும் அவர்கள் மிக முக்கிய கருவியாக நினைக்கின்றார்கள். எனவே ஷரீஆவையும் அதன் விளைவுகளையும் கொச்சைப்படுத்துவதன் ஊடாக உலக அபிப்பிராயத்தை அதற்கெதிராக தோற்றுவிப்பதிலும், அதனை தொடந்து பேணுவதில் கண்ணும்கருத்துமாக இருக்கிறார்கள். எனவே எங்கேனும் ஷரீஆவுடன் தொடர்புடைய சிறிய சலசலப்புக்கள் அவர்களின் காதுகளில் விழுந்தாலும் அதனை ஊதிப்பெருப்பித்து தமது தீய நிகழ்ச்சி நிரலுக்கு தீனியாக்க நினைக்கிறார்கள்;. இந்த பெண்ணிற்;கு எதிரான தீர்ப்பின் பக்கம்; அனேகமான மேற்குலக ஊடகங்களின்; பார்வை திரும்பியுள்ளமைகூட இதற்கொரு நடைமுறை உதாரணமாகும்.

உலகிலே இஸ்லாத்திற்கு எதிராக வளர்ந்துவரும் சிந்தனா ரீதியான போராட்டத்தின் சிந்தனைத்தெரிப்புக்கள் எமது நாட்டிலும் படாமலில்லை. உலகம் ஒரு உள்ளங்கைப்பந்தைப்போல் சுருங்கிவிட்டதால் உலகில் பலம்வாய்ந்த நாடுகள் எந்த கருத்தோட்டங்களை உலகில் விதைக்கிறார்களோ அவைதான் முற்போக்கானது, அவைதான் சரியானவை என வாதாடும் ஒரு அறிவீனம்தான் இன்று தலைத்தோங்கியிருக்கிறது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. மேலும் தாராண்மைவாத முதலாளித்துவ சிந்தனையின் அடிப்படையிலேயே உலகை நாமும் அணுகி வருவதால் மேற்குலகின் பார்வையே பெரும்பாலும் எமது பார்வைகளாகவும் அமைந்து விடுகின்றன. எமது நாட்டில் ஷரீஆ என்றவுடன் அல்லது முஸ்லிம் தீவிரவாதம் என்றவுடன் ஊடகங்கள் அளவுக்கு அதிகமாக எழுதுவதையும், பேசுவதையும் இதனால்தான் நாம் காண்கிறோம். எனினும் மேற்குலகை எடுத்துக்கொண்டால் அது ஷரீஆ சட்டங்களைப்பற்றிய தெளிவான புரிதலுடன்தான் அதனை எதிர்க்கிறது என்று சொல்லலாம். ஆனால் இன்றுவரை இலங்கையில் இடம்பெற்று வரும் ஷரீஆவுக்கு எதிரான் பிரச்சாரங்கள் ஷரீஆ பற்றி முழுமையான தெளிவுக்கு பின் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. ஏனெனில் ஷரீஆ சட்டங்கள் என்றவுடன் அதனை பெரும்பாலும் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களுடன் மாத்திரம் வரையறுத்துப்பார்க்கும் ஒரு தவறான புரிதலே இலங்கையில் மிக அதிகளவில் இருக்கிறது. ஷரீஆ சட்டங்கள் என்பது குற்றவியல் சட்டங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது மனித வாழ்வின் அரசியல், சமூக, பொருளாதார அனைத்துச் விவகாரங்களையும் கட்டுப்படுத்தும் சட்டத்தொகுப்பாகும் என்ற புரிதல் அவர்களிடம் இருப்பது கிடையாது. இந்தத் தவறை விடுவதில் பல சந்தர்ப்பங்களில் புத்திஜீவிகளும் விதிவிலக்கல்ல.

இவ்வாறு இஸ்லாத்தின் யதார்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாத பலர் ஷரீஆ சட்டங்கள் இன்றைய உலகுக்கு ஏற்புடையதுதானா அல்லது அது மனிதாபிமானதுதானா என்ற கேள்வியை ஷரீஆவின் மீது எழுப்புவது மிகவும் முட்டாள்தனமானது. ஏனெனில் ஷரீஆ சட்டங்கள் என்பது வெறுமனவே அந்திரத்தில் தொங்கும் சட்டங்கள் கிடையாது. மாறாக அதற்கொரு நிரூபிக்கப்பட்ட திட்டவட்டமாக அறிவார்ந்த அடிப்படை இருக்கின்றது. ஒரு உறுதியாக அத்திவாரத்திலேயே அது நிறுவப்பட்டுள்ளது. எனவே அந்த அடிப்படை பற்றிய கேள்வியை முதலில் எழுப்பாமல் அதன் மேல் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஷரீஆவின் ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக எடைபோட்டுப்பார்ப்பது அறிவுக்கு புறம்பானதாகும்.

குற்றங்களுக்கு தண்டனைகளை விதிக்க முன்னர் அல்லது வாழ்வை நிர்வகிப்பதற்கான சட்டங்களைச் சொல்ல முன்னர் இஸ்லாம் மனிதனைப்பார்த்து ஒரு விடயத்திலே தீர்க்கமான முடிவுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறது. பிரபஞ்சம், மனிதன், வாழ்வு பற்றிய அடிப்படைக்கேள்விகளை எழுப்பி, தனது சொந்த அறிவினைக்கொண்டும், புலனுணர்வைக்கொண்டும் முழு உலகையும் படைத்து பரிபாலிக்கின்ற ஒரு படைப்பாளன்; இருக்கின்றான் என்ற அடிப்படை பற்றி மனிதன் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. அறிவும், புலனுணர்வும் உள்ள எந்தவொரு மனிதனும் அந்த முடிவைத்தவிர வேறு எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அது அடித்துக் கூறுகிறது. பின்பு அந்த இறைவன் யாவற்றையும் அறிந்த ஞானமும், அனைத்தையும் சூழ்ந்த அதிகாரமும் படைத்தவன் என்பதை, பிரபஞ்சத்ததையும், அதில் பரிணமிக்கின்ற மனித வாழ்வையும் ஆராய்கின்ற எவரும் உணர்ந்து கொள்வார்கள் என்ற உண்மையையும் அது ஆணித்தரமாக முன்வைக்கிறது. அதேபோலவே மனிதனின் அறிவாற்றலுக்கு ஒரு எல்லையுண்டு என்பதையும், அவன் இந்த பிரபஞ்ச விதிகளுக்கும், அதனைக்கட்டுப்படுத்தும் கர்த்தாவுக்கும் முற்றிலும் கட்டுப்பட்டவன் என்ற உண்மையையும் அது திட்டவட்டமாக இயம்புகிறது. எனவே யாராலும் மறுக்கமுடியாத இந்த உண்மைகளில் நின்றுதான் இஸ்லாம் தனது அடிப்படைக்கொள்கையை (அகீதாவை) மிக உறுதியான ஒரு அடித்தளத்தில் பதிக்கிறது.

அதாவது இறைவன் எம்மனைவரையும் படைத்தவன். அவன் எம்மைவிட அறிவில் நிறைந்தவன். ஆகையால் அவனது வழிகாட்டல்கள் எமது எல்லைக்குட்பட்ட அறிவின் தீர்வுகளைவிட துல்லியமானதும், அறிவார்ந்தமானதுமாகும் என்ற உண்மை எந்தவொரு மனிதனாலும் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் அந்த அடிப்படை உண்மையை அறிவிலிகளும், அகங்காரக்காரர்களும் மனமுரண்பாடான ஒரு நிலையிலிருந்து மறுத்துவிடுகிறார்கள். மிகப்பலகீனமான ஒரு அடித்தளத்திலிருந்து கொண்டு இப்படிப்பட்டவர்கள் இறைவனின் வழிகாட்டலான இஸ்லாத்தையும், அதனது தீர்வுகளாக ஷரீஆவையும் கேள்விக்குட்படுத்துவதுதான் விசனத்துக்குரியது. எனவே ஷரீஆவின் ஏற்புடமை பற்றி பேசுவதற்கு முன்னர் இஸ்லாமிய அகீதாவின் ஏற்புடமை பற்றிய ஒரு நேர்மையான வாதத்திற்கு ஒருவர் முன்வரவில்லை என்றால் அவர் ஷரீஆ பற்றிக் கருத்துச் சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ தகுதியற்றவர். இந்த வழிமுறையல்லாது வேறெந்த அடிப்படையிலும் அவர் தனது வாதத்தை நிர்மாணிப்பாரானால் அது மணல் மேல் கட்டிய கட்டிடத்திற்கு ஒப்பானதாகும். எனவே இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனை பற்றியோ குறிப்பாக கல்லால் எறிந்து கொல்லுதல் பற்றியோ விவாதிப்பது அறிவுடமையாகும். எனவே ஏக இறைவன் அல்லாஹ்(சுபு) என்பதையும், அவனின் வழிகாட்டல்கள்தான் அல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவுமாகும் என நிரூபணமாகிவிடும்போது அந்த வழிகாட்டலுக்குள் வழங்கப்படுகின்ற தண்டனைகள் அனைத்தும் அப்பழுக்கற்றதும், அருள் நிறைந்ததும் என்று நிரூபணமாகி விடுகின்றன. அது கரங்களை வெட்டுவதாக இருந்தாலும் சரி, கல்லால் எறிந்து கொல்வதாக இருந்தாலும் சரியே. இந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே நாம் ஷரீஆ பற்றிய தெளிவை சமூகத்தளத்தில் முன்வைக்க வேண்டும். ஷரீஆ வழங்குகின்ற தண்டனை முறை உலகிலுள்ள அனைத்து தண்டனை முறைகளையும் விட சிறந்ததும் மனிதாபிமானதும் சமூகத்திற்கு நிரந்தரத் தீர்வுகளை பெற்றுத்தரக்கூடியதுமாக இருந்தாலும்கூட அவற்றை விளக்குவதன் ஊடாக இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனைக்கான நியாயாதிக்கத்தை நாம் நிரூபிக்க நினைத்தால் அது ஸ்திரமற்றதும் ஆபத்தானதாகும்.

உதாரணமாக விபச்சாரக்குற்றமொன்று இஸ்லாமிய நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவதற்கு மூன்று வகையான ஆதாரங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒன்று, திருமண பந்தத்தில் இல்லாத நிலையில் கர்ப்பம் வெளிப்படல், இரண்டாவது, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக அந்த நபரே நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளுதல், மூன்றாவது, குறித்த நபர் உடலுறவில் ஈடுபடும் காட்சியை கண்டதாக நான்கு நம்பிக்கைக்குரிய சாட்சிகள் சாட்சியம் கூறல். இதில் நம்பிக்கைக்குரிய நான்கு பேர்கள் சாட்சி கூறதல் என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை, எனவே ஒருவர் தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டாலோ, அல்லது கர்ப்பம் வெளிப்பட்டாலோ தவிர கல்லால் எறிந்து கொல்லுதல் என்ற சட்டத்தை அமூல்படுத்துவது சாத்தியமற்றது. எனவே இஸ்லாம் இந்தச் சட்டத்தை ஒரு சமூகம் இந்தத்தீமையிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதற்காக வகுத்துள்ளதேயொழிய அதனை நிறைவேற்றுவதை நோக்கமாகக்கொண்டல்ல என்று சிலர் கருத்துச் சொல்வதைக் காண்கிறோம். இந்தக் கருத்தை கூறுவதன் ஊடாக இவர்கள் சில அடிப்படைத் தவறுகளை விடுகிறார்கள். முதலில் மேற்குலகும் அதனை பின்பற்றும் ஏனையோரும் விபச்சாரக் குற்றத்திற்காக ஒருவரை கல்லால் எறிந்துகொல்வது மிகவும் கொடூரமானதும், காட்டுமிராண்டித்தனமானதும் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கும்போது அதற்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் இஸ்லாத்தின் தீர்ப்பை நியாயப்படுத்துவதையும்;, அக்குற்றச்சாட்டிலிருந்து அதனைப் பாதுகாப்பதையும் அடிப்படையாகக் கொண்டே தமது வாதத்தை இவர்கள் நிர்மாணிக்கிறார்கள். இது ஒரு எதிர்வினையாற்றலேதவிர அறிவார்ந்த அணுகுமுறையல்ல. அதனால்தான் கல்லால் எறிந்து கொல்வது கொடுமையானதுதான். ஆனால் அது மிக அரிதாகத்தான் நடக்கும் அல்லது நடந்திருக்கிறது என்ற அடிப்படையில் அதனை நியாயப்படுத்த நினைக்கிறார்கள். ஒருவர் இவர்களிடம் அரிதாகவும் அது இடம்பெறுவது அத்தண்டனையைப்பெறும் நபரைப்பொருத்தமட்டில் கொடூரமானதுதானே என்ற கேள்வியை திருப்பி முன்வைத்தால் இவர்கள் திக்குமுக்காட வேண்டிய நிலை தோன்றிவிடும். அதேபோல கல்லால் எறிந்து கொல்வது மாத்திரம்தான் கொடுமையானதா? இஸ்லாத்தில் களவெடுத்தால் கையை துண்டித்து விடுவது கொடுமையானது இல்லையா? ஒரு களவுக்காக ஒரு மனிதனை நிரந்தரமாக அங்கவீனமாக்குவதா, மேலும் களவைப்பொருத்தவரையில் நான்கு சாட்சிகள் தேவையில்லையே என்று இன்னொருவர் மாற்றிக்கேட்டால் இவர்கள் என்ன பதில் சொல்வது? எனவே அல்லாஹ்(சுபு) ஒரு சட்டத்தை நிறுவியிருந்தால் அதனை அமூல்செய்வதன் ஊடாக பல நன்மைகள் தோன்றலாம், அல்லது பல தீமைகள் நீங்கலாம், அல்லது அந்தச் சட்டம் உலகில் பலமுறை பயன்படுத்தப்படலாம் அல்லது அது குறைந்தளவே நிறைவேற்றப்படலாம் எனினும் அவற்றை அடிப்படையாக வைத்து ஷரீஆ சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மாறாக மனிதனின் செயல்களுக்கு அல்லாஹ்(சுபு) விதித்த வரம்புகளை கடைப்பிடிப்பதற்காகவேதான் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலும் ஷரீஆவுக்கான நியாயாதிக்கம் அது அல்லாஹ்(சுபு) இருந்து வந்தது என்ற ஒரேயொரு கருத்திலிருந்து பிறப்பதேயல்லாமல் அதிலிருந்து மனிதன் எடைபோட்டுப்பார்க்கின்ற நன்மை தீமைகளின் அளவீட்டிலிருந்தல்ல என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பிறரின் குற்றச்சாட்டுக்கு நாம் எதிர்வினையாற்றாமல் முதலில் அடிப்படைக்கருத்தை உறுதியாக நிறுவியதன்பின் வேண்டுமானால், ஷரியத்தின் பின்னால் இருக்கின்ற ஞானத்தைப்பற்றி மக்களுக்கு விளக்குவதில் தவறல்ல.

மேலும் இன்று ஷரீஆ என்பது ஏதோ ஒரு வேதாந்தம் மாதிரியும் அல்லது வெற்றுத்தத்துவம் போன்றும் அல்லது இன்றைய காலத்திற்கு உதவாத ஏழாம் நூற்றாண்டு பஞ்சாயத்து தீர்ப்புகள் போலவும் யாரேனும் பிரச்சாரம் செய்ய முயற்சித்தால் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க எடுக்கும் முயற்சியாகும். ஏனென்றால் ஷரீஆ என்பது பல நூற்றாண்டுகளாக உலகில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சீரிய சட்டமுறைமை என்பது முஸ்லிம் அல்லாத அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. மேலும் அது நடைமுறை ரீதியாக உலகில் ஏற்படுத்திய புகழ்பெற்ற சமூகப்புரட்சிக்கு நிகராக வரலாற்றில் வேறெந்த முன்னுதாரணமும் இல்லை. இன்று போலியாக மானுடம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் பேசும் மேற்குலகு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அறிவொளியின் நிழல்கூட படாது இருளில் மூழ்கிக்கிடந்த பொழுது அதற்கு முன்னரே பலநூற்றாண்டுகளாக ஷரீஆவை நடைமுறைப்படுத்திய இஸ்லாமிய உலகு உலகின் முன்னணி சமூகமாக விளங்கிய புகழ்பெற்ற வரலாற்றை இந்த போலிப்பிரச்சாரார்களால் மூடி மறைக்க முடியுமா? எனவே ஷரீஆ நடைமுறைக்குதவாத ஒரு சில காலகட்டத்துடன் மட்டுப்படுத்தபட்டது என்ற வாதமும் அடிப்படையற்றது. இன்னும் சொல்லப்போனால் கிலாஃபத்தை பல சதிவலைகளை விரித்து வீழ்த்தியதன் பின்னால் ஷரீஆவின் குற்றவியல் சட்டங்கள் போன்ற சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை மாத்திரம், ஊறுகாயைத் தொட்டுக்கொள்வதைப்போன்று தமது அரசியல் நலன்களுக்காக மாத்திரம் நடைமுறைப்படுத்தும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் கூட ஒப்பீட்டளவில் குற்றச்செயல்கள் மிகவும் குறைவாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது. மேற்குலகில் இடம்பெறும் கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், கற்பழிப்பு, போதைப்பாவணை, வன்முறை என்பனவற்றின் புள்ளிவிபரங்களுடன், குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை நடைமுறைப்படுத்தும் சவூதி போன்ற நாடுகளின் புள்ளிவிபரங்களை ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை உடனடியாக அவதானிக்கலாம்.

முடிவுரை

முஹம்மத்(ஸல்) அவர்கள் எப்போது மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்களோ அந்தக்கணத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாமிய நீதித்துறையும், அதன் தண்டனை முறையும் தொடர்ந்தேர்ச்சையாக நடைமுறைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன. அவை மக்களுக்கு மத்தியிலான முரண்பாடுகளை மிகச்சிறப்பாக தீர்த்து வைத்தன. சமூகங்களின் உரிமைகளை பாதுகாத்தன. ஆட்சியாளர்களிடமிருந்தான ஆளப்படுவர்களின் உரிமைகளை ஷரீஆவின் அடிப்படையில் முழுமையாக பெற்றுக்கொடுத்தன. இஸ்லாமிய ஆளுகைக்குள் வாழ்கின்ற சமூகங்களும், பிறஜைகளும் தமது உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்ற பூரணமான நம்பிக்கையுடன் அதன் நீதியை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இவை அனைத்தையும் இஸ்லாமிய அரசு அமூல் செய்தது. இஸ்லாமிய நீதித்துறையின் அதிகாரமும் அதன் ஆளுமையும் அது சில குற்றங்களுக்கு வழங்குகின்ற கடுமையான தண்டனை முறைகளின் மீதோ அல்லது மக்கள் மீதான கொடுங்கோளின் மீதோ கட்டியெழுப்படவில்லை. மாறாக அதன் ஆதிகாரமும், ஆளுமையும் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மிகச்சிறப்பான தீர்வுகளை வழங்கவல்ல இஸ்லாமிய அகீதாவிலிருந்தும், அதன் வெளிப்பாடான ஷரீஆவை பின்பற்றுவது ஒரு இபாதத் என்ற கருத்தோற்றத்திலிருந்துமே உருவாகியுள்ளன. எனவேதான் 13 நூற்றாண்டுகளுக்கும் மேலான இஸ்லாமிய அரசின் வரலாற்றில் மிகமிகக்குறைந்த அளவிலேயே }தூத் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டிய சூழலை அவ்வரசு சந்தித்திருந்தது. அல்லாஹ்(சுபு)விற்கு தமது அனைத்து காரியத்திலும் கட்டுப்படவேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கவல்ல சூழலும், குற்றச்செயல்களை எவ்விதத்திலும் அனுசரித்துப்போகாத இஸ்லாமிய அரசின் உறுதியான நிலைப்பாடும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் மனோநிலை சமூகத்தில் அமைதியும் நீதியும் நிலைநாட்டப்படுவதற்கும், குற்றச்செயல்கள் வெறுமனவே விதிவிலக்காவதற்கும் உதவி வந்தன என்பதை நாம் சமூகத்தின் முன் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோல இஸ்லாத்தின் மீது பிறர் முன்வைக்கும் தவறாக குற்றச்சாட்டுகளுக்காக வலைந்து நெழிந்து போக வேண்டிய தேவையும் முஸ்லிம் தலைமைகளுக்கோ, பொதுமக்களுக்கோ இல்லை. மேலும் இஸ்லாத்தின் மீது அதன் எதிரிகளால் முன்னெடுக்கப்படும் நச்சுப்பிரச்சாரங்களைக் கண்டு நாம் கதிகலங்கிவிடக்கூடாது. சத்தியத்தை சுமந்த மனிதர்கள் என்ற வகையில் அசத்தியத்தின் அசட்டுத் துணிவுக்கு முன் நாம் கால்மடித்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாம் எம்மால் வலிந்து பாதுகாக்கப்பட வேண்டிய கையறு நிலையில் இல்லை. அது யாவற்றையும் கட்டியாளும் ஞானமிக்கவனின் மார்க்கம், அது சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அதன் இயல்பால் அழிந்தே தீரும் என்ற வீர முழக்கத்துடன், தாக்குதல் வீச்சுடன் அருளப்பட்டமார்க்கம். அந்த உயர்ந்த கண்ணியத்தை அதற்கு வழங்கிய நிலையிலிருந்தே நாம் பாதுகாக்க வேண்டும். அதனை தூய்மையாகவும், வாய்மையாகவும் பின்பற்றுவதிலும், எதிர்விளைவுகளை அசட்டை செய்யாது நேர்மையாக முன்வைப்பதிலும்தான் எமது கண்ணியம் இருக்கிறது. எனவே இந்தப் பெண்ணின் தீர்ப்பு இலங்கையில் உருவாக்கியிருக்கின்ற கருத்தலைகள் முற்றாக ஓய்ந்து வேறொரு சர்ச்சைக்குள் நாம் மூழ்கிவிட முன் இந்த கணங்களை இஸ்லாமிய சித்தாந்தத்தை எமது மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிக்கவும், பிற மக்களின் சிந்தனையில் பொறியாகத் தெறிக்கவும் பயன்படுத்த எத்தனிப்போம்.

 

 

 
 

ரஜப் தைய்யிப் அர்துகானின் கட்சியின் வெற்றி அமெரிக்காவின் வெற்றியேயொழிய முஸ்லிம்களின் வெற்றியல்ல!

ஆய்வு 10 நவம்பர் 2015

 

துருக்கியில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி(AKP) தனித்து ஆட்சியமைக்கக்கூடிய நிலையில் வெற்றி பெற்றதையிட்டு எமது

 
 

காஸா படுகொலைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது?

ஆய்வு 05 ஆகஸ்ட் 2014

காஸாவில் கொத்துக்கொத்தாக முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்படுவதை முழு உலகும் வேடிக்கை பார்த்து வருகிறது.

 
 

இஸ்லாம்தான் சவால் ! ஒபாமா குமுறல்

ஆய்வு 29 மே 2014

 

“மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு உண்மையான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்…. ரஷ்யா அல்ல…” இவ்வாறு ஒபாமா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ….

 
 

பக்கம் 1 / 2