துருக்கிய - இஸ்ரேலிய உறவு: மீண்டும் தேன்நிலவு!

செய்திப்பார்வை 16 பிப்ரவரி 2017

இரு நாட்டிலும் நிலவிய குழப்ப நிலையால் துருக்கிக்கும் - இஸ்ரேலுக்கும் இடையில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் இடைநிறுத்தப்பட்டிருந்த உறவுகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன் அரசியல் கலந்தாலோசனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. " பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் துருக்கிக்கும் - இஸ்ரேலுக்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்துவத்தை இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன." என இரு நாட்டுப் பிரதிநிதிகளும் அங்காராவில் இடம்பெற்ற கூட்டங்களில் உடன்பட்டுள்ளனர் என இராஜதத்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

வியாக்யானம்:

கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி அங்காராவிலே துருக்கி மற்றும் இஸ்ரேலினது வெளி விவகார அமைச்சின் செயலகங்களுக்கிடையிலான 15ஆவது சுற்று அரசியல் கலந்தாலோசனைகள் இடம்பெற்றன. அதன் அடிப்படையில் 1987ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் பேச்சுக்கள் சில வருடங்களாக தடைப்பட்டு இருந்தாலும், கடந்த 6 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட இராஜ தந்திர முயற்சிகளின் காரணமாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முதலில், மாவி மர்மரா சம்பவத்திற்கு பிறகு துருக்கிக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவுகள் நிறுத்தப்பட்டன என்ற பிரச்சாரத்தை நேர்மையான அரசியல் அவதானிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் அக்காலப்பிரிவிலும் சாதனை படைத்திருந்தன என்பதையும் மறுக்கவும் மாட்டார்கள். எனவே உறவுகள் தற்போதுதான் உயிர்ப்படைந்திருக்கி;ன்ற என்ற தோற்றப்பாடு உண்மையில் போலியானதாகம்.

" இஸ்ரேலுடனான துருக்கியின் உறவை இயல்புப்படுத்துவது பிராந்திய நலனுக்கு உகந்ததாகும்" என்ற ஜனாதிபதி அர்துகானின் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேலும் அந்தக் கருத்துடன் தானும் ஒத்துப்போவதாகத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏகேபி கட்சியின் பேச்சாளர் ஒமர் ச்சேலிக் "இஸ்ரேலிய அரசும், அதன் மக்களும் துருக்கியின் நண்பர்கள்" என வெட்கம் கெட்டுப்போய் கூறியிருந்தார்.

எனினும் துருக்கிய மக்கள் இந்த வஞ்சக ஆட்சியாளர்களின் கூற்றுக்களிலிருந்து மிகவும் தூரமானவர்கள் என்பதால் இந்தக் கூற்றுக்கள் துருக்கிக்குள் சர்ச்சையை கிளப்பியும் விட்டிருந்தன. உண்மையில் "இஸ்ரேல்" என்ற இந்த யூத சியோனிச அலகு தீவிரவாத ஆக்கிரமிப்பு அரசாகும். 1967 அல்லது 1948 ஆம் ஆண்டு எல்லைக்கள் எனக் கூறப்படுகின்ற எதுவும் சட்ட பூர்வமானவையோ, நியாய பூர்வமானவையோ அல்ல. மேலும் கொடூரமான இந்த சியோனிச அலகு ஒருபோதும் முஸ்லிம்களின் நண்பனாய் இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. மாறாக இந்த சியோனிச அரசு மத்திய கிழக்கையும், முஸ்லிம் உலகையும் பீடித்திருக்கும் இழிவான புற்றாகும். அது வேருடன் பிடிங்கப்பட்டு வரலாற்றின் புதை குழிக்குள் மீண்டும் துளிர்விடாத வகையில் புதைக்கப்பட வேண்டியது என்பதே உண்மையாகும்.

அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاء بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5:51)

ஜுன் 2016 இல் துருக்கிக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கருத்தொருமிப்பு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்கு அவை அமூல்படுத்தப்பட்டது. இந்த காலப்பிரிவில் மாபி மர்மரா சர்ச்சையும் அர்துகானின் அரசியல் அழுத்தங்களினால் தளர்த்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையில் இயல்பு நிலையை தோற்றுவிப்பதில் நெருடலாக இருந்த ஒரேயொரு தடையும் நீக்கப்பட்டது. சியோனிச அரசு 20 மில்லியன் டொர்களை மாபி மர்மரா சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடுபத்திற்கு வழங்கிய போதும் அதனை அந்தக் கண்ணியமிக்க குடும்பங்கள் ஏற்க மறுத்ததால் அந்த நிதி தற்போது துருக்கிய அரச வங்கியில் தேங்கிக் கிடக்கிறது.

தற்போது நடந்து முடிந்திருக்கும் கலந்தாலோசனையில் சில முக்கிய தலைப்புக்கள் பேசப்பட்டிருந்தன. "விசேடமாக சக்தி வளங்கள், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களில் கூட்டுறவு குறித்தும், அரசியல் கலந்தாலோசனைகளில் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பிராந்தியங்களில் களநிலை வளர்ச்சி தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன." மேலும் "பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் துருக்கிக்கும் - இஸ்ரேலுக்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்துவத்தை இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன."

இந்த கலந்தாலோசனை இடம்பெற்ற மறுதினம் துருக்கிய வெளி விவகார அமைச்சு "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய பிரதேசங்களில் மேலதிகமாக 3000 சட்ட விரோத குடியேற்றங்களை அமைப்பதற்கான அனுமதியை இஸ்ரேலிய அரசாங்கம் வழங்கியிருப்பதற்கு நாம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என அறிக்கை வெளியிட்டிருந்தது.

எமது புனித பூமியை ஆக்கிரமித்து, எமது உம்மத்தின் மண்டை ஓடுகளின் மீது அமைக்கப்பட்டுள்ள இழிந்த சியோனிச அரசுடன் அமர்ந்து பேசுவது என்பதே மூடத்தனமான ஒரு காரியமாக இருக்கின்ற போது அந்த இழிந்தவர்களுடன் நாம் நெருக்கமாக வைத்திருக்கும் உறவுதான் பிராத்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமானது எனக் கூறுவது முஸ்லிம் உம்மத்திற்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.

மேலும் ஒரு பக்கத்தில் மிக நெருக்கமான அரசியல், பொருளாதார உறவுகளை வைத்துக்கொண்டு மறு பக்கத்தில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு கண்டனம் தெரிவிப்பது என்பது கேலிக்கிடமானதாகும். மேலும் சியோசின அரசு என்பதற்கே எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லாதபோது அவர்களின் ஒரு செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்ற சாதாரண தர்க்கம் கூட புரியாதது போல நடிப்பவர்கள் இவர்கள்.

எனவே இந்த 15ஆவது கலந்தாலோசனைக் கூட்டமும் மென்மேலும் இஸ்ரேலுக்கு பலத்தையும், இருப்பையும் உறுதிப்படுத்துவதுடன், துருக்கி, பலஸ்தீன் உட்பட முழுப்பிராந்தியத்தையும் பீதியில் ஆழ்த்தும் என்பதே யதார்த்தமாகும்.

 

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh