தஃவா

ஜெரூசலம் சியோனிச அலகின் (Israel) தலைநகராக பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் செய்யக்கூடிய 5 முக்கிய விடயங்கள்!

பிரசுரங்கள் 12 டிசம்பர் 2017

கடந்த டிசம்பர் 7ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெரூசலத்தை சியோனிச அலகின் (Zionist entity) அதாவது இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து தமது அரசினது நிலைப்பாட்டை வெளியிட்டார். இதன் மூலம் அமெரிக்காவை உத்தியோகபூர்வ பாதுகாவலனாக வெளிப்படையாக பிரகடனப்படுத்தினார். அது மாத்திரமல்லாது தமது இந்த நிலைப்பாட்டுக்கு முஸ்லிம் நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் தனது திட்ட முன்னெடுப்பில் அவைகள் பக்கபலமாக இருக்கின்றன என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சூழலில் அல் குத்ஸின் மீட்சிக்காக நாம் என்ன செய்யலாம்?

 

1. சத்தியத்தை பகிரங்கப்படுத்தல்:

அநியாயத்திற்கு முன்னால் அமைதி காத்தல் என்பது ஒரு தீர்வாக மாட்டாது. அல்குத்ஸ் எமது ஈமானுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. இவ்விடயத்திலும் இதுபோன்ற ஏனைய விடயங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுப்பது சகல முஸ்லிம்களதும் கடமையாகும். தீய சியோனிச அலகிற்கு எதிராக வாய் திறப்பதை இன்றுள்ள அரசுகள் தீவிரவாதமாக பார்த்தாலும் முஸ்லிம்கள் இவ்விடயத்தில் அமைதி காக்க முடியாது.

2. ஆர்பார்பாட்டங்களை ஒழுங்கு செய்தல்:

அல்குத்ஸ் உட்பட முழுமையான பலஸ்தீனின் விடுதலைக்காகவும், பலஸ்தீன விடுதலைக்கு வெற்று ஒப்பந்தங்களோ, இரு-அரசு தீர்வுகளோ வேறு எந்த போலி நாடகங்களோ தீர்வாக அமையாது என்ற செய்தியை மக்கள் மயப்படுத்தியும் அமைதி ஆர்பாட்டங்கள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்.

3. முஸ்லிம் ஆட்சியாளர்களை கேள்விக்குட்படுத்தல்:

முஸ்லிம் ஆட்சியாளர்கள்தான் சியோனிச அலகின் உண்மையான பாதுகாவலர்கள். அவர்களின் துணையில்லாது சியோனிச அரசு அரபுலகில் ஒரு நாளிகையைக் கூட கடக்க முடியாது. இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளையும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு இன்றுவரை பேணிவரும் இவர்களின் வீராப்புப் பேச்சுக்களால் நாம் ஏமாந்து விடக்கூடாது. சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து, பகிஸ்தான் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் பகையை அஞ்சுகின்றனவேயொழிய அல்லாஹ்வுக்கு (சுபு) அஞ்சுவதாக இல்லை. இவர்கள் நினைத்தால் இவர்களது இராணுவங்களைக் கொண்டு இந்த சியோனிச அடாவடித்தனத்திற்கு மிக இலகுவாக முடிவு கட்டி விடலாம். எனினும் அதனைச் செய்கின்ற திராணி இவர்களிடம் இல்லை. எனவே முஸ்லிம் இராணுங்களே! அல்லாஹ்வுடைய அழைப்புக்கு செவிசாயுங்கள். பலஸ்தீனை விடுவிக்க அணிதிரளுங்கள் என்ற அழைப்பை நாம் தொடர்ந்தும் முன்வைக்க வேண்டும்!

4. ஆட்சியாளர்களின் தோலுரித்தல்:

காலனித்துவ சக்திகளது திட்டங்களை தோலுரிப்பது மிக முக்கியமானது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற காலனித்துவ நாடுகளது உண்மையான முகம் என்ன என்பதையும், அவர்களின் அக்கறையெல்லாம் எதிலே குவிந்துள்ளது என்பதையும் முஸ்லிம் உம்மத்திற்கு படம்பிடித்துக் காட்ட வேண்டும். முஸ்லிம் உம்மத்தில் தமது பாதத்தை உறுதிப்படுத்திய நிலையில் அங்குள்ள வளங்களை உறிஞ்சுவதும் முஸ்லிம்களது இரத்தத்தை ஓட்டுவதுமே இவர்களது உண்மையான குறிக்கோள் என்பதனை நாம் பட்டவர்த்தனப்படுத்த வேண்டும்.

5. சர்வதேச அழைப்பிலே இணைந்து கொள்ளல்:

கிலாஃபா ராஷிதாவினால் மாத்திரமே அல்-குத்ஸ், காஸ்மீர் மற்றும் ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம் நிலங்கள் விடுவிக்கப்பட முடியும் என்பதே யதார்த்தம். எனவே கிலாஃபத்தை மீள நிலைநாட்டுவதற்கான சர்வதேச அழைப்புப்பணியுடன் இணைந்து கொள்வதும், அதற்கு இயலுமான ஆதரவை வழங்குவதும் எம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.

 

 

முஸ்லிம் தரப்புக்களை விஜயதாச ராஜபக்ஷ சந்தித்தது வெறும் கண்துடைப்பாய் முடிந்துவிடும்!

அறிக்கைகள் 27 நவம்பர் 2016

இலங்கையைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸுடன் இணைந்து இருக்கிறார்கள் என பாராளுமன்றத்திலே கூறி எரிந்து கொண்டிருந்த இனவாதத்தீயில் எண்ணெய் வார்த்த நீதி அமைச்சரும், புத்த சாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ, அண்மையில் பொதுபல சேன உட்பட ஏனைய கடும்போக்கு பௌத்த தீவிரவாதக்குழுக்களையும், ஜம்மியத்துல் உலமா உட்பட முஸ்லிம் குழுக்களின் பிரதிநிதிகளையும் வெவ்வேறாக சந்திந்திருந்தார். இச்சந்திப்பு மிகவும் ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது என முஸ்லிம் தரப்பால் கூறப்பட்டது. அதே நேரத்தில் வெறும் இரு மணிநேரமே இடம்பெற்ற இச்சந்திப்பை தொடர்ந்து இனிமேல் முஸ்லிம்களும், பௌத்தர்களும் எமது பிரச்சனைகளை பேசித்தீர்த்துக்கொள்வதுதான் சிறந்தது@ இனவாதமோ, மதவாதமோ பேசுவதில் பலனில்லை என்று கூறிய ஞானசார தேரரின் வார்த்தைகள் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பாராளுமன்றத்தில் வேண்டுமென்றே முஸ்லிம்களை வம்புக்கிளுத்த நீதியமைச்சரும், இனவாதம் கொப்பளிக்கும் ஞானசார தேரர் போன்றவர்களும் ஒன்று கூடி சொற்ப நேரத்துக்குள் தலைகீழாக பேசுகிறார்கள் என்றால் அதனை அரசியல் விழிப்புணர்வுள்ள எவரும் நம்பக்கூடாது. மாற்றமாக இதற்குள் சூழ்ச்சிகளும், சதிகளும் நிறைந்திருக்கின்றன என்ற முடிவுக்கே வர முடிகிறது.

ஐரோப்பிய யூனியன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் கூறியது தொடக்கம் இன்று வரை இடம்பெற்று வருகின்ற நிகழ்வுகளை உற்று நோக்கினால் அவை இயல்பாக இடம்பெறுபவைகளாகத் தெரியவில்லை. 2017, ஏப்ரல் மாதத்தில் இடம்பெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கு தேவையான தத்தமது வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ளுவதற்காக ஒன்றேல் மஹிந்த அணியினாலோ, அல்லது அரசாங்கத்தினாலோ தூண்டி விடப்பட்ட நிகழ்வுகளாகவே இவை தெரிகின்றன. அல்லது மஹிந்த தனக்காக ஆரம்பிக்க, அதனை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த சம்பவங்களாகக் கூட இருக்கலாம். எனவே பொதுவாக தேர்தல் காலங்களுக்கு முன்னர் இடம்பெறும் இத்தகைய அரங்கேற்றங்களைக் கண்டு நாம் அதிர்ந்துவிடாமால் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்துதான் எமது நாட்டில் கட்சி அரசியல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை இனவாத்தை அடிப்படையாகக் வைத்து அரசியல் செய்கின்ற வித்தை மாத்திரம் தான் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் தெரியும். எனவே இனவாதம் தேவையான அளவிற்கு தூண்டிவிடப்பட்டு பின்னர் கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் தூண்டி விடப்படுதல் என்ற அரசியல் நரித்தனம் ஒன்றும் இலங்கையில் ஆச்சரியமானதல்ல.

இவ்விடத்தில் முஸ்லிம்கள் சில யதார்த்தங்களையும் உணர வேண்டும். சில காரியங்களில் ஈடுபட வேண்டும்.

இலங்கையில் இனவாதம் நிரந்தரமானது. அதிலும் குறிப்பாக பௌத்த இனவாதம் அரசியல் மயப்பட்டிருப்பதை இலகுவில் மாற்றுவது சாத்தியமற்றது. எனவே காலத்துக்கு காலம் அந்த இனவாதம் உண்மையாகவோ அல்லது குறுகிய கால அடைவுகளுக்காகவோ எம்மை நோக்கி கக்கப்படுவதை தடுக்க முடியாது. எனவே இன்றிருக்கின்ற சூழலில் தலைகீழ் மாற்றம் ஏற்படாமல் இனவாத்தை எவ்வாறு இல்லாது செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருப்பது நேர விரயமாகும். மாறாக அந்த இனவாதம் எம்மீது பாய்கின்ற வீரியத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனவும், எவ்வாறு அதனை எதிர்கொள்ளலாம் எனவும் சிந்திப்பது மாத்திரமே நடைமுறைச் சாத்தியமானதாகும்.

இலங்கையில் நிலவுகின்ற இந்த அரசியல் யதார்த்தம் இலங்கையை ஆட்டிப்படைக்கின்ற வல்லரசுகளுக்கு நன்றாகவே தெரியும். எனவே இனவாத்தை பாவித்து அவர்களின் நலன்களை அடைந்து கொள்வதற்காக அதனைக் கூர்மையாகவும், பளபளப்பாகவும் அவர்கள் பாதுகாத்து வருவார்கள். அதனையும் மீறி அதனை மழுங்கடிப்பது என்பது மிகவும் கஷ்டமானதாகும்.

இந்த யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு எவ்வாறு இந்த இனவாதத் தீயை நாம் எதிர்கொள்ளலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

1) இனவாதத்தின் காரண கர்த்தாக்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் போட்டுடைக்க வேண்டும். அவர்களின் சூழ்ச்சிகளையும், செயல் வழிகளையும் தோலுரித்துக் காட்ட வேண்டும். இதன் பின்னணியில் வல்லரசுகள் தொடக்கம் கடைநிலையிலுள்ள ஞானசார வரைக்கும் உள்ள தொடர்புகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது இரண்டு நன்மைகளை ஏற்படுத்தும். ஒன்று அது மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்துக்கொண்டு நாடகமாடும் கயவர்களின் மனோதிடத்தை உடைக்கும். இரணடு, மக்கள் தமது தலைமைகளையும், அவர்களது கொள்கைகளையும், அதன் பின்னாலுள்ள சிந்தாந்தங்களையும் கேள்விக்குட்படுத்தி மாற்றீடு பற்றி சிந்திக்கச் செய்யும்.

2) இனவாதம் தலை விரிக்கின்ற போதும், அது தாண்டவம் ஆடுகின்றபோதும் அதனைக் கட்டுப்படுத்த முடியாது வேடிக்கை பார்க்கும் அரசாங்கங்களும், அதன் சட்டமொழுங்கைப் பாதுகாக்கும் நிறுவனங்களும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். அதனூடாக அரசாங்கங்களும் அதன் நிறுவனங்களும் பாரிய அழுத்தத்தை உணர வேண்டும். அவ்வாறு செய்வது மக்கள் இலங்கையின் அரச இயந்திரத்தின் கையாளாகத்தனத்தையும், அது கட்டியெழுப்பப்பட்டுள்ள அடிப்படைகளையும் பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகோலாக அமையும்.

3) மக்கள் மத்தியில் ஏனைய சவால்களைப் போலவே இனவாத்தையும் இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கங்களாலோ, அது கொண்டிருக்கும் கொள்கைகளாலோ முடியாது என்பதை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும்.  இலங்கையில் இனவாத்தை  முற்றாகவே துடைத்தெரியக் கூடிய சக்தி இஸ்லாத்திற்கு மாத்திரமே உள்ளது என்பதை மிக அழுத்தமாக முன்வைக்க வேண்டும்.

இந்த மூன்றையும் நாம் செய்யும் பட்சத்தில்...

ஒன்று, இனவாதிகளின் முகத்திரை கிழிந்து அவர்கள் தம்மை நியாயப்படுத்த முடியாது போகும்.

இரண்டு, அரசாங்கங்கள் தமது சாயம் வெளுப்பதை உணர்ந்து சுதாகரித்துக் கொள்ளும்.

மூன்று, நல்ல மக்கள் இஸ்லாத்தை ஒரு மாற்றீடாக சிந்திக்கத் தூண்டப்படுவார்கள். குறைந்தது அவர்கள் இஸ்லாத்தை எதிர்காதிருப்பார்கள்.

இவை அனைத்தும் இணையும்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் அல்லாஹ்(சுபு)வின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். இன்ஷா  அல்லாஹ்!

 
 

Muslim Personal law controversy – An attempt by the west to secularise the Muslims.

நிகழ்வுகள் 13 நவம்பர் 2016

On his recent visit to Belgium, Prime Minister Ranil Wickremesinghe met with officials from the European Union and European Parliament. The purpose of these meeting was to discuss the GSP Plus concession for Sri Lanka.

Ironically one of the main conditions put forward by the European Union, which was again confirmed by the EU Ambassador to Sri Lanka, to reinstate the GST Plus is the amendment of the Muslim personal law.

Following this, Ranil Wickremesinghe’s government has appointed a ministerial sub-committee under the leadership of the Justice minister Mr. Wijeyadasa Rajapakshe to look into this issue. This sudden rush towards this amendment has been viewed with scepticism by many in the society, and the call to immediately stop this reformation initiative can be heard from many within the community. From statements from All Ceylon Jamiathul Ulama and the National Shura Council condemning this move, to an aggressive protest by SLTJ, the aspiration of the Muslim community has been made clear to the Government of Sri Lanka.

Similarly, various articles opinion pieces are flooding the mainstream and social media from seasoned journalists and activists in our community.

This is the backdrop of this article which is aiming to clarify the root cause of this problem, and in a concise manner and provide direction to the Muslim community on how we should approach and deal with this issue.

If we pay close attention to the recent trends in the country, we will not fail to notice the anti-Islamic sentiments that are brewing in the land, where basic matters like spiritual worship to food and clothing of Muslims is under the spotlight. We live in a time where the discussion on Halal food, animal sacrifices (Kurbani), building / extending masajid or indeed the burkha – everything that Muslims are holding on to from their religion is viewed in a derisory manner. This new issue, the issue of the Personal law of Muslims is nothing but a new addition to this growing list of things targeting the Muslims and their adherence to Islam.

The Personal law of Muslim is similar in nature to the personal law and rights given to other communities in the Island, where an individual has been given the concession to deal with issues arising in their personal matters in line with their religious teaching or belief system. This concession does not in any shape or form influence or undermine the law of the land, be it in social, political and economical spheres. So in an era where such basic rights of individuals are being violated, especially with foreign influence, it will increasingly become difficult for us to even practice the basic aspects of our religion. As a community we need to realise this fact and be not surprised as in today’s political world order such realisations have become the norm.

With the fall of Soviet Union, the west sees Islam and the global Muslim ummah as the only threat to its Capitalistic, secular liberal way of life; so separating this ummah from its Islamic thoughts and identify, and assimilating Muslims voluntary or forcefully to their way of life, has been in the forefront of their agenda. Getting Muslims to submit to the principal and order set by them is considered to be a vital issue for them. Nowadays we can understand why Muslims are being specifically targeted when we realise that all other cultures and religions have already succumbed to this pressure and has adopted these secular liberal values.

As a proponent of capitalist ideology, western nations and European Union will not move an iota unless the issue is linked to their strategic or vital interest– this is well known to anyone who understands the capitalistic ideology. Subjugating the third world countries and using its institutions such as World Bank, IMF and others NGO to force them to serve their foreign policies is not a secret. Accordingly, today, the western world is looking for Sri Lanka to play its role in their anti-Islamic campaign, and is using GSP Plus as a tool to achieve this. Sri Lanka will not have any option other than to succumb to this pressure. We as a community have to clearly understand that apart from perhaps the worry of losing the Muslim vote, no government in Sri Lanka will have any genuine concern on this issue.

How should we deal with this?

First and foremost, we should not become the scapegoat to the agenda of the west and the stance the Sri Lankan Government is bound to take in line with it. We should from the onset reject any attempt to secularise Muslim community by diluting its culture and identify and treading the path of total assimilation, in the way west want us to.

Today, the sad reality is such that like any other country, including Muslim majorly countries, the Muslims in Sri Lanka are already ruled by secular laws. The only respite we have is in the issue of personal matters such as nikah, thalaq, and Inheritance - these are the only matters where we have the ability to settle in accordance with the sharia. We should remember that our forefathers have protected this for generation as they saw it as a vital component for us to protect the identity of the Muslims on the island. Any attempt to reform this as per the like and dislikes of others is an attempt to further distance the Muslims from the Sharia – so we should vehemently reject any such calls.

Further, it is also equally important that we don’t fall for the trap of aiding them in their agenda without realising it. For example, in the issue of marriage the EU has demanded that the minimum age of consent for a female was to be increased to 16 years from the current 12 years. Let us explore how we should approach this issue so that we don’t involuntarily fall into the trap of aiding them in their quest to secularise the Muslim population in Sri Lanka.

There are two prominent views regarding this within our society. One being the argument that we should not change the Muslim personal law on the request of a foreign entity and the second being the question on why there is a pressing need for the government to appoint a new ministerial committee to deal with this issue despite already having a committee in place for the last 7 years led by High Court Judge Saleem Marsoof.

Although there is no disagreement that this reformation should not be done because of foreign intervention, the issue here is that if we are not careful we will end up doing to ourselves what the west is trying to achieve regarding this issue. Similarly, what is more important is not the argument on who should lead on this discourse; rather our focus should be on how both these committees will approach this issue.

Allah (SWT) has not set an age limit for women in the Sharia - be the minimum age limit or the maximum age limit. Allah SWT has given that right to the individual and their guardian, no other person has any rights to interfere with that.

We are aware of the strong words of the old lady when Umar (RA) tried to put a limit on the Mahr considering the benefit it will bring to the society. She severely accounted Umar (RA) and said “Mahr is a right that has been given to us by Allah (SWT) and the Khalifah has no rights to put a limit upon it.” The age limit issue is also similar to this in the view point of the Sharah, and we have to learn a lesson from this incident.

So any attempt to put an age limit for marriage or taking that right from the individuals concerned is tantamount to giving prominence to man’s mind over the sharia even if it was done in the name of Islam and Sharia. Muslims should in principal reject any such attempts. For if they agree to accept any of the recommendation, be it from the EU, from the committee led by judge Saleem Marsoof, or from the new ministerial sub-committee and regardless of the outcome of the proposal, in essence will mean that Muslims are distancing themselves from the Sharia and are involuntarily falling into the agenda of the European Union.

The Sharia that was sent to us by the creator of the heavens and the earth is beyond the capacity of human’s limited mind, so naturally He SWT gives the most optimal solutions to man’s every problems. In some cases our limited mind can comprehend the wisdom behind the law and in other cases we may not, however regardless, we have to accept his solution wholeheartedly. This is the sign of true Imaan. We may see in our society instances where women face challenges in life due to marriage at a young age. The Sharia has nothing to do with this. Instead it is the decision of her family and the reality of the society she lives in, including other external factors that are the reasons for her facing such ordeal. This does not warrant any change to the position held by the Sharia.

The west is in the forefront in promoting the idea that the Sharia is not capable of solving the problems that modern man faces. They are attempting to distance the ummah from Islam and reduce her confidence in Islam. Unless we understand this clearly we are in danger of following an Islam that is palatable to the west, which is restricted to only some ritual worships such as our prayers and fasting and leading us to be like any other religion, adopting the secular way of life - using manmade solutions, namely the capitalistic viewpoint about life. In these challenging times we need to not only hold firm on to Islam but use it as an opportunity to stand up for the truth and expose the fallacy of the western democracy, its values and its ideals that are being forced upon us.

It is indeed a joke to even think that the EU is truly concerned about the well being of the Muslim women in Sri Lanka. Their true nature becomes apparent if we look at their track record on how women are treated in their own society. Women, who should be treated as mothers, sisters, wives and daughters are objectified as an advertisement tool, as a commodity to satisfy man’s sexual instinct being degraded through pornography, gentlemen’s clubs and prostitution. How can we accept solutions from the mind of men who deny the truth and fight against it? Moreover, what rights do they have to advise others regarding the treatment of women? What audacity does the west have to advise other nations on the rights of women when their own societies are built upon false and dangerous values such as liberalism and freedom, while the atrocities against women are rampaging without control, and their family structures have completely and irreversible collapsed.

In fact the problem is much deeper than this. In the recent years the endemic nature of child abuse in Europe, especially in British establishments has been brought to light. Are we expecting a viable solution from a civilisation that cannot even protect its vulnerable children in its schools, hospitals, and churches?

Even in Sri Lanka the main reason for the recent trend in the increase of violation against women is none other than an outcome of adopting western culture. Cases of rape of own children, rape and killing of under aged girls etc. are all an outcome of abandoning own cultures, social customs and morals in favour of western ideals.

In contrast, Islam does not recognise false values such as “liberalism” and so-called “freedom” promoted by the western capitalistic ideology. It aims to protect the honour and dignity the family unit and promotes mutual respect between men and women. In an Islamic society, women are not objectified for the pleasure of others. Instead, it values them as human beings and their intelligence. Islam gave political, economical, and social rights to women long before the women in the west even dreamed about fighting for it. The entire society is constructed on the basis that man and women are equal slaves of Allah SWT.

If the western world and the other civilisation are to cure the social malaise in their societies, they have no option other than to adopt the Islamic values and sharia, not to undermine it. Sri Lanka is no exception to this.

We request that the following be considered in the discussion regarding the Muslim personal law in Sri Lanka:

1. No non-muslims or anyone without Sharia knowledge should be allowed to intervene in this discourse.

2. As in this case, if this issue is raised for a political reason by internal or external political forces, Muslims should unite and speak out against it and expose its reality.

3. If we, especially the leaders and scholars (ulama) in the society are succumbing to the pressure of others and twisting and bending the Sharia to please others, we should remind them to fear Allah (SWT) and the day of recording.

4. We should remember that this is part of the agenda of the west to secularise the Muslims around the globe.

5. The western values and slogans such as Liberalism, freedom, human rights, women rights, gender equality etc. are all incapable of solving the problems mankind faces. We should question any solutions that are coming from such values.

6. We need to accept the fact that the current Muslim personal law is deficient in its current form, and any attempt to reform it should be to bring it more closer to the Sharia, and not away from it.

7. We have the duty and the responsibility to intellectually present, first and foremost to the Muslims and to the wider society that only the Islamic ideology and its solutions can truly liberate the mankind from the misery they face today be it in the west or in the east, alike.

8. Finally, only the full implantation of the laws revealed by the creator Allah (SWT) can truly solve this issue and the countless others faces by the Muslim ummah today. Since this can only be achieved by the re-establishment of the rightly guided Khalilah, we as a community should learn from such incidents and work towards this permanent solution at all levels in the society.

 

 

 
 

முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தக் கோரிக்கை - முஸ்லிம்களை மதச்சார்பற்றவர்களாய் மாற்றும் மேற்குல முயற்சி!

நிகழ்வுகள் 12 நவம்பர் 2016

அண்மையில் பெல்ஜியத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கரமசிங்க  GSP+  வரிச்சலுகையை இலங்கை திரும்பவும் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதும் முக்கிய நிபந்தனையாக அவர்களால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைவாக தற்போது, அத்தகைய சட்டத்திருத்தத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி ஆராய நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரபை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அரசாங்கம் அவசர அவசரமாக செய்ய நினைக்கின்ற சட்டத்திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும், அனைத்து வடிவங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, தேசிய சூரா சபை போன்றவற்றின் வினயமான கண்டனங்கள் தொடக்கம் சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் ஆக்ரோசமான ஆர்பாட்டங்கள் வரை முஸ்லிம்களின் உணர்வுகள் அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாக முன்வைக்கப்;பட்டுள்ளன. எமது சமூகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் தொடக்கம் இளைய சமூக ஆர்வலர்கள் வரைக்கும் பிரதான ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து எழுதியும், பேசியும் வருகிறார்கள். இவற்றிற்கு மத்தியில் இந்த புதிய சவாலின் யதார்த்தம் என்ன? அதனை நாம் எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான சில கருத்துக்களை மிகச் சுருக்கமாக முன்வைப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

ஹலால் உணவை உறுதிப்படுத்துவது, குர்பானிக்காக விலங்குகளை அறுப்பது, புர்கா அணிவது, மஸ்ஜித்களை விஸ்தரிப்பது என முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் மற்றும் உணவு, உடை போன்ற சர்வ சாதாரணமான விடங்களை இலங்கையிலே கடைப்பிடிக்கும்போது கூட அது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றப்படும் சூழலை நாம் நுணுக்கமாக உற்று நோக்க வேண்டும். இந்தப் போக்கின் பரிணாமத்தில் இன்று முஸ்லிம் தனியார் சட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டம் என்பது பெரும்பாலும் முஸ்லிம்களின் தனிநபர் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை தமது மார்க்கத்தின்படி நிறைவேற்றிக் கொள்வதற்காவும், அதிலே ஏற்படக்கூடிய சிக்கல்களை மார்க்கத்தின் வழிகாட்டலின்படி தீர்த்துக் கொள்வதற்காகவும் வழங்கப்பட்டுள்ள ஒரு சட்ட ஏற்பாடாகும். இத்தகைய சட்ட ஏற்பாடுகள் முஸ்லிம்களுக்கு போலவே ஏனைய சமூகங்களுக்கும் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் இலங்கையின் ஏனைய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் ஆட்சி தொடர்பான எந்த சட்ட எல்லைக்குள்ளும் செல்வாக்குச் செலுத்துவதில்லை. ஒரு சமூகம் தாம் ஏற்றுக்கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கு ஏற்ப தமது தனிப்பட்ட விவகாரங்களை தீர்த்துக் கொள்ளக்கூடிய மிகவும் சாதாரணமான இத்தகைய சட்டப்பாதுகாப்புக்குள் கூட தீய நோக்கங்களுடனும், அரசியல் இலக்குகளுடனும் வெளி சக்திகள்; தலையிட நினைக்கிறார்கள் என்றால் இலங்கையில் எமது மார்க்கத்தை இனி இலகுவாக பின்பற்ற முடியாத சூழல் வளர்ச்சி பெற்று வருகிறதென்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். இதுவொரு ஆச்சரியமான அல்லது அதிர்ச்சியான செய்தியல்ல. ஏனெனில் இன்றைய உலகின் அரசியற் காலநிலை அத்தகையது.

முதலாளித்துவ மேற்குலகு, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், தமது மதச்சார்பற்ற(Secular), தாராண்மைவாத(Liberal), முதலாளித்துவ நாகரீகத்தை ஆட்டங்காணச் செய்கின்ற ஒரேயொரு சக்தியாக இஸ்லாத்தை காண்கிறது. அவர்களுக்கு சவால் விடுக்கக்கூடிய ஒரேயோரு சமூகமாக உலகளாவிய முஸ்லிம் உம்மத்தைக் காண்கிறது. அந்த சக்தியின் ஊற்றான இஸ்லாமிய சிந்தனையிலிருந்து முஸ்லிம்களை சிறிது சிறிதாக அப்புறப்படுத்தாது விட்டால் உம்மத் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை தம்மால் சமாளிக்க முடியாது போய்விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதேபோல விரும்பியோ, விரும்பாமலோ தமது விதிகளுக்கு கட்டுப்பட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகத்தை மாற்றுவதும் அவர்களுக்கு மிக முக்கியமானதாகும். எனவே உலகில் அவர்கள் நிர்ணயித்திருக்கின்ற நியமங்களுக்கும், ஒழுங்குகளுக்கும் அடிபணிந்து வாழக்கூடிய ஒரு மனோநிலைக்கு முஸ்லிம்களை கொண்டுவரவேண்டிய தேவை அவர்களைப் பொருத்தவரை ஜீவமரணப்போராட்டமாகும். உலகிலிருக்கின்ற ஏனைய கலாசாரங்களும், மதங்களும் ஏற்கனவே மதச்சார்பற்ற சிந்தனையால் விழுங்கப்பட்டு உள்ளதால் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மாத்திரம் குறிவைத்தே இத்தகைய அழுத்தங்கள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன.

இந்த GSP+ விவகாரத்தை பொருத்தமட்டிலும் அவர்கள் அதனைத்தான் அடைய நினைக்கின்றனர். இலங்கைக்கு மேற்குலகு ஏதேனும் ஒன்றில் உதவுகிறென்றால் அதைவிடப் பெரிதான கைமாறை எதிர்பார்த்தே அதைச் செய்கிறது என்று சுத்தமான இலாபநோக்கை மாத்திரம் மந்திரமாகக் கொண்ட முதலாளித்துவத்தின் யதார்த்தத்தை புரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். வளர்முக நாடுகளை தமது வட்டிக்கடன்களைக் கொண்டும், நிவாரணங்களைக் கொண்டும் அடிமைப்படுத்தி வரும் மேற்குலகு தமது உலகளாவிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அந்த நாடுகளை நடனமாடச் சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையில் இஸ்லாத்திற்கு எதிரான தமது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையும் உதவ வேண்டும் என அவர்கள் நிபந்தனை வைத்தால் அதனை மறுப்பதற்கு இலங்கையால் முடியாது. உள்நாட்டில் முஸ்லிம்களின் வாக்குகளை இழந்து விடுவோமோ என்ற உளக்குமுறலைத்தவிர இலங்கையில் தோன்றக்கூடிய எத்தகைய அரசாங்கங்களும் அது குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

சரி, இந்தப் பிரச்சனையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?

மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கும், அதற்கு சோரம்போயுள்ள இலங்கையின் நிலைப்பாட்டுக்கும் நாம் பலிக்கடாவாக்கப்படக்கூடாது. அதாவது முஸ்லிம்களை மதச்சார்பின்மையை நோக்கி படிப்படியாக அழைத்துச் சென்று மேற்குலகு விரும்புகின்ற ஒரு மைநீரோட்ட அடையாளத்திற்கும், கலாசாரத்திற்கும் அவர்களை பழக்கப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தை நாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களைப் பொருத்தவரையில் உலகின் ஏனைய பெரும்பாலான முஸ்லிம்களைப்போன்றே அவர்களின் வாழ்க்கையின் அனைத்து கருமங்களும் (துரதிஷ்டவசமாக) ஏற்கனவே மதச்சார்பற்ற நியமங்களுக்கும், சட்டங்களுக்கும் ஏற்பவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் நிகாஹ், தலாக், சொத்துரிமை போன்ற ஒருசில தனிப்பட்ட விககாரங்களில் மாத்திரம் ஷரீஆ தழுவிய வழிகாட்டல்களைக் கொண்டு அவர்கள் தமது பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறார்கள். தமது தனித்துவமான அடையாளத்தை பாதுகாக்கும் காரணிகளில் ஒன்றாக அதனையும் காலங்காலமாக அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். எனினும் அதிலேயும் பிறரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப திருத்தங்களைச் செய்யச்சொல்லுவது முஸ்லிம்களின் தனித்துவத்தை சிதைக்கின்ற, அவர்களை ஷரீஆவிலிருந்து மென்மேலும் தூரம்படுத்துகின்ற நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது. எனவே அதனை முஸ்லிம்கள் முழுமையாக எதிர்க்க வேண்டும்.

அதேபோல எமது கரத்தினால் சில தவறுகள் நடந்து விடக்கூடாது என்பதிலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மணப்பெண்ணின் ஆகக் குறைந்த வயதெல்லையை 12 இலிருந்து 16 வயதாக உயர்த்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நாம் எவ்வாறு அணுகிவிடக்கூடாது என்பதை சற்று நோக்குவோம்.

இது தொடர்பாக இரு முக்கியமான குரல்கள் சமூகத்திற்குள்ளிருந்து வருவதைக் காண்கிறோம். ஒன்று எமது தனியார் சட்டத்தை வெளிநாட்டு நிர்பந்தங்களுக்காக நாம் மாற்ற முடியாது என்ற வாதம். இரண்டாவது அதற்காக ஒரு குழு ஏற்கனவே உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்ஸுப்பின் தலைமையில் கடந்த ஏழு வருடங்களாக இயங்கி வருகின்ற போது அரசாங்கம்; புதியதொரு அமைச்சரவை உபகுழுவினூடாக இதனைச் அவசரமாக செய்யவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வி.

ஆனால் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பிறரின் தலையீட்டை நாம் வன்மையாக எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் அவர்கள் அடைய நினைக்கின்ற அடைவை நாம் எமது கரத்தாலேயே செய்து முடித்துவிடக்கூடாது என்பதே முக்கியமாகும். அதேபோல நீதிபதி சலீம் மர்பிஸுன் குழுவா அல்லது புதிய குழுவா அதனை செய்யவேண்டும் என்ற சர்ச்சையை விட இந்த பிரச்சனையை இரு குழுக்களும் எவ்வாறு அணுகப்போகின்றன என்பதே முக்கியமானதாகும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் ஒரு பெண் திருமணம் முடிப்பதற்கான வயதெல்லையை அது திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை. அது ஆகக்குறைந்த வயதெல்லையாக இருக்கட்டும், ஆகக்கூடிய வயதெல்லையாக இருக்கட்டும். அது அல்லாஹ்(சுபு)வினால் அந்தப்பெண்ணுக்கும், அவளின் பாதுகாவலர்களுக்கும் அல்லாஹ்(சுபு) வழங்கியிருக்கும் தனிப்பட்ட உரிமையாகும். அதிலே தலையிடுவதற்கு வேறு யாருக்கும் உரிமையில்லை.

சில சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு மஹர் தொகையின் உயர் பெறுமானத்தை நிர்ணயம் செய்ய நினைத்த கலீஃபா உமர்(ரழி) அவர்களைப் பார்த்து " மஹர் அல்லாஹ்(சுபு) எங்களுக்கு வழங்கிய உரிமை - அதனை வரையறுக்க கலீஃபாவாலும் முடியாது " என்று அந்த யோசனையை வெளிப்படையாக மறுத்த மூதாட்டியின் சம்பவத்தில் எமக்கொரு படிப்பினை இருக்கிறது.  மஹரைப் போன்றதொரு நிலைதான் இந்த வயதெல்லையிலும் இருக்கிறது. எனவே இஸ்லாத்தின் பெயரால், இஸ்லாமிய ஷரீயத்தின் பெயரால் ஒரு பெண்ணின் திருமணத்திற்கான குறைந்த வயதெல்லையை பிரிதொருவர் தீர்மானிக்க நினைப்பது ஷரீயத்தின் நிலைப்பாட்டுக்கு பதிலாக மனித மூளையின் அளவுகோளுக்கு தலை வணங்குவதாகவே அமையும். இத்தகைய ஒரு நிலைப்பாட்டுக்கு ஐரோப்பாவின் வேண்டுதலுக்காகவோ, நீதிபதி சலீம் மர்பிஸுன் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்காகவோ அல்லது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உப குழுவின் சிபாரிசுக்காகவோ முஸ்லிம் சமூகம் வருமானால் அது இறுதியில் (ஷரீயத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்த வேண்டும் என்ற) ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலின் நோக்கத்தை பூர்த்தி செய்வதாகவே அமையும். அது வயதை 12ஆகவே வைத்துக்கொண்டாலும் சரி, 15 என்று சொன்னாலும் சரி, அல்லது ஐரோப்பிய ஒன்றியம் கோரியதற்கு இணங்க 16 ஆக உயர்த்தினாலும் சரியே.

அல்லாஹ்(சுபு) எமக்கு வழங்கியிருக்கின்ற வேதம் மனித பலகீனங்களுக்கு அப்பாற்பட்டதாகும். அது மனிதனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் துல்லியமாக தீர்வளிக்கக்கூடியது. அல்லாஹ்(சுபு) அருளியுள்ள சட்டங்களின் ஞானம் எமக்கு புரிந்தாலும் சரி, புரியாது விட்டாலும் சரி அதனை மனம்முரண்படாது ஏற்று வாழ்வதே ஒரு முஸ்லிமின் ஈமான் உறுதியாக இருக்கிறது என்பதற்கான சான்றாகும். இலங்கையில் இளைய வயதில் திருமணம் முடித்த பெண்களின் சிலரின் வாழ்க்கை சவால் நிறைந்ததாய் மாறியிருக்கலாம். அதற்கு ஷரீயத்தின் நிலைப்பாட்டைக் குறை சொல்ல முடியாது. மாறாக அந்த பெண்ணின் குடும்பம் எடுத்த தீர்மானங்கள், அந்த பெண் வாழ்ந்த சமூகத்தின் யதார்த்தங்கள் போன்ற மற்றும் பல காரணிகள் அதற்கு காரணமாக இருக்குமேயொழிய அவை ஷரீயத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவர காரணங்களாக அமையாது.

எமது தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளையும், சமூகத்தில் நாம் சந்திக்கின்ற சவால்களையும் இஸ்லாமிய ஷரீயத்தின் தூய்மையான நிலைப்பாடுகளுடன் தேவையில்லாமல் முடிச்சுப்போட்டு அவற்றிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோருவதை நாம் கைவிட வேண்டும். ஷரீஆவின் எல்லா நிலைப்பாடுகளும் நவீன கால பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதுவானதல்ல, எனவே அவற்றிலே மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை மேற்குலகால் முஸ்லிம் உம்மத்திடம் அனுதினமும் வெவ்வேறு வடிவங்களில் முன்வைக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். அதனூடாக ஷரீஆவின் முழுமையான ஏற்புடமை தொடர்பான சந்தேகத்தை முஸ்லிம்களின் மனதில் விதைத்து வளர்க்கின்ற பணியை அவர்கள் இடைவிடாது செய்து வருகிறார்கள். அதன் ஆபத்தை நன்குணர்ந்து நாம் எம்மை சுதாகரித்துக் கொள்ளவில்லையானால் முஸ்லிம்கள் தமது தொழுகை, நோன்பு போன்ற ஒரு சில இபாதத்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தை தொட்டுப்பார்த்துவிட்டு உலகின் ஏனைய மதத்தவர்களைப்போல வாழ்வின் ஏனைய அனைத்து விடயங்களுக்கும் சடவாத உலக நியதிகளையும், மனித மூளையின் நிலைப்பாடுகளையும் பின்பற்றுகின்ற, குறைந்தது அனுசரித்துச்செல்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். அந்நிலை தோன்றுமானால் அது ஒரு  மதச்சார்பற்ற முஸ்லிம் சமூகத்தின் உற்பத்தியாகும். அதனைத்தான் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகம் முழுவதும் மேற்குலக வல்லாதிக்க சக்திகள் உருவாக்க நினைக்கிறார்கள். இத்தகைய நிர்பந்தமான சூழலில் இஸ்லாத்தை உறுதியாக பற்றிப்பிடித்துக் கொண்டு சத்தியத்தை சான்று பகர வேண்டிய பொறுப்பிலுள்ள நாங்கள் எம்மீது நிர்பந்தத்தை ஏற்படுத்த நினைக்கின்ற குப்ரிய சக்திகளின் நாகரீகத்தையும், அதன் விழுமியங்களையும் கேள்விக்குட்படுத்துவதற்கு இதனை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக பாவிக்க வேண்டும். அதுதான் இக்காலத்தில் செய்யக்கூடிய மிகச்சிறந்த அழைப்புப்பணியாகும்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் யுவதிகளின் திருமண வயது பற்றியும், அவர்களின் நல்வாழ்வு பற்றியும், மனித உரிமை பற்றியும் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற மேற்கத்தையவர்கள் அவர்களின் நாடுகளில் எவ்வாறு பெண்களை நடாத்துகிறார்கள் என்று ஒரு கணம் பார்தாலே போதும் அவர்களின் வண்டவாளங்கள் தெரிந்துவிடும். தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும் பார்க்க வேண்டிய பெண்களை ஃபோனோகிரஃபிக் படங்களிலும், விளம்பரங்களிலும், களியாட்ட விடுதிகளிலும் வெறும் பாலியல் பண்டமாக பாவித்து அதிலிருந்து வயிறு வளர்;கின்ற மேற்குலகுக்கு உலகின் ஏனைய சமூகங்களின் நிலை குறித்து கருத்துச் சொல்ல அல்லது நிபந்தனை விதிக்க என்ன அருகதையிருக்கிறது? சுதந்திரம், தாராண்மைவாதம் போன்ற பிழையானதும், ஆபத்தானதுமான விழுமியங்களை தமது அடிப்படை அளவுகோளாகக் கொண்டு தமது நாகரீகத்தை, கலாசாரத்தை உருவாக்கியிருக்கும் மேற்குலகில் பெண்களுக்கு எதிரான அனாச்சாரங்களும், வன்முறையும் கட்டுக்கடங்காது வளர்ந்து வருவதும், அதனால் அங்குள்ள குடும்பக்கட்டமைப்புக்கள் முழுமையாக சீரழிந்து வருவதும் தீர்க்கப்பட முடியாத பிரச்சனையாக மாறியிருக்கும் நிலையில் அவற்றை தீர்க்க முடியாத மேற்குலகுக்கு பெண்கள் தொடர்பான சர்வதேச நியமங்களைத் தீர்மானிக்க என்ன தகுதியிருக்கிறது?

பிரித்தானியாவின் 2007ஆம் ஆண்டுக்கான குற்றச்செயல் ஆய்வறிக்கை  பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 230 பெண்கள் பலாத்தகாரமாக கற்பழிக்கப்படுவதாகச் சொல்கிறது.  2004ஆம் ஆணடுக்கான ஆய்வறிக்கை பிரித்தானியாவிலுள்ள ஒவ்வொரு நான்கு பெண்களிலும் ஒரு பெண் அவளது 16 வயதிலிருந்து ஏதோவொரு வகையில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சொல்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒருமுறை பெண்கள் பாலியல் தாக்குதல்களை முகம் கொடுக்கிறார்கள் என நீதிக்கான அமெரிக்கத் திணைக்களம் குறிப்பிடுகிறது. இவை உண்மை நிலவரத்தின் சில துளிகள் மாத்திரமே. இந்த இலட்சணத்தில் பெண்களின் உரிமை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?

இஸ்லாமிய உலகில் மாத்திரமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த சமூகங்கள் கட்டிக்காத்த சில நல்ல பண்பாடுகளையும் தமது நாசக்கலாசாரத்தின் திணப்பின் ஊடாக களங்கப்படுத்தியுள்ள மேற்குலகை எமது நாடு ஒரு முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது. மேற்குலக்கலாசாரத்தின் விளைவுதான் இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். சொந்தத்தகப்பனே மகளை கற்பளிக்கும் நிலை, ஐந்தாறு வயது சிறுமிகளைக்கூட விட்டு வைக்காது கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்யும் நிலை, கருக்களைப்பாலும், ஆண், பெண் உறைகளாலும் தம் மானத்தை மறைத்துக் கொள்ளும் நிலை என எமது நாட்டின் கலாசாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் மேற்குலக கலாசாரத்தின் ஊடுருறுவலைத் தடுத்தாலேபோதும் எமது பெண்களின் உரிமைகள் பல பாதுகாக்கப்பட்டுவிடும்.

இஸ்லாம் இத்தகைய அசிங்கங்களுக்கு காரணமாக 'சுதந்திரம்', 'தாராண்மைவாதம்' போன்ற மேற்குலக விழுமியங்களை பாதுகாக்க நினைக்கவில்லை. மாறாக அது கற்பு, கண்ணியம், ஆண் பெண் இருபாலாருக்குமான பரஸ்பர மரியாதை, உறுதியான திருமண பந்தம், உடையாத குடும்ப அலகு என சமூகத்தின் ஆன்ம ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய விடங்களுக்கே அது முக்கியத்துவம் கொடுக்கிறது. இஸ்லாமிய சமூகமொன்றில் பெண் என்பவள் சந்தோசம் தருகின்ற ஒரு தசைப்பிண்டமாகப் பார்க்கபடுவதில்லை. மாறாக அவளது ஆன்மாவுக்கும், அறிவுக்குமே அங்கே மதிப்பளிப்படுகிறது. ஆணுக்கு நிகராக பெண் நிற்க வேண்டும் என்ற போராட்டம் அங்கே இயல்பாகவே தோன்றுவதில்லை. பெண் கேற்பதற்கு முன்பே அவளுக்கு அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆண்களும், பெண்களும் அல்லாஹ்(சுபு)வின் முன் சமமான அடியார்கள் என்ற நிலையிலிருந்தே சமூகம் முழுமையும் நிர்மானிக்கப்படுகிறது.

எனவே மேற்குலக நாகரீகமும், உலகின் ஏனைய நாகரீகங்களும் தம்மை உய்விப்பதாக இருந்தால், தமது நாடுகளில் புரையோடிப்போயுள்ள சமூக நோய்களை சுகப்படுத்துவதாக இருந்தால் இஸ்லாத்தின், இஸ்லாமிய ஷரீயத்தின் அரவணைப்புக்குள் அடைக்களம் புகுவதே ஒரே வழியே ஒழிய இஸ்லாத்தையும், இஸ்லாமிய ஷரீயத்தையும் கொச்சப்படுத்த நினைப்பதல்ல. இந்த நிலை எமது நாடான இலங்கைக்கும் பொருந்தும். இலங்கையும் இஸ்லாத்திலிருந்து எவ்வளவோ பலன்பெற வேண்டியுள்ளது.

எனவே தற்போது முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் தொடர்பாக உருவாகியுள்ள கருத்தாடலில் கீழ்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

1) முதலில் எமது தனியார் சட்டத்தில் மூக்கை நுழைப்பதற்கு முஸ்லிம் அல்லாத, ஷரீயத் பற்றிய தெளிவில்லாத எவரையும் நாம் அனுமதிக்க கூடாது.

2) அரசியல் காரணங்களுக்காக வெளிநாட்டு சக்திகளும், (அரசு உட்பட) உள்நாட்டு சக்திகளும் இந்த விடயத்தைக் கையிலெடுத்தால் அதனை தோலுரித்துக் காட்டி முஸ்லிம் சமூகம் அதனை ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும்.

3) பிறரின் நிர்பந்தத்திற்காக ஷரீஆவை வளைத்து நெளித்து தீர்வை எட்ட நினைப்பதில் நாம் எல்லோரும் அல்லாஹ்(சுபு)வைப் பயப்பட வேண்டும். குறிப்பாக சமூகத்தலைமைகளும், உலமாக்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

4) உலகெங்கும் முஸ்லிம்களை மதச்சார்பற்றவர்களாக மாற்ற நினைக்கும் மேற்கின் சூழ்ச்சியின் ஒரு வடிவம்தான் இந்த சட்டத்திருத்த கோரிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

5) சுதந்திரம், தாராண்மைவாதம், மனித உரிமை, பெண்ணீயம், பால் சமத்துவம், பெண்ணுரிமை போன்ற மேற்குலக கோட்பாடுகளும், கோஷங்களும் மனிதகுல நல்வாழ்வுக்கான சர்வதேச நியமங்களைத் தீர்மானிக்க எத்தகைய தகுதியும் அற்றவை என்பதால் அவற்றை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை நாம் உறுதியாக கேள்விக்குட்படுத்த வேண்டும்.

6) இன்று நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டக்கோவை குறைபாடுகளுடன்தான் காணப்படுகிறது என்பதால் அதனை மென்மேலும் இஸ்லாமிய ஷரீயத்தின் வரையறைக்குள் கொண்டு வருவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகம் பிறரின் நிர்ப்பந்தங்கள் எதுவுமில்லாது சுதந்திரமாக ஈடுபட வேண்டும்.

7) இன்றைக்கு சர்ச்சையை தோற்றுவித்துள்ள பெண்களின் திருமண வயதெல்லை  தொடர்பான பிரச்சனை தொடக்கம் உலகின் அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தரமானதும், நடைமுறையானதுமான தீர்வு ஷரீயத்தில் மாத்திரம்தான் உள்ளது என்பதை முஸ்லிம் சமூகத்திற்குள்ளும், பொது  சமூக வெளியிலும் அறிவார்ந்த ரீதியில் தெளிவுபடுத்த வேண்டும்.

8) இறுதியாக, முழு முஸ்லிம் சமூகமும் தனக்காக அல்லாஹ்(சுபு) இறக்கியருளிய இறைச்சட்டங்களைக்கொண்டு தனது வாழ்வை முழுமையாக வழி நடாத்தினாலேயொழிய இதுபோன்ற சவால்களை இல்லாதொழிக்க முடியாது. முஸ்லிம் தனியார் சட்டம் மாத்திரமல்ல, எமது வாழ்வின் அனைத்துப் பரப்புக்ளும் ஷரீயத்தின் ஆளுகைக்குள்ளேயே நிர்வகிக்கப்பட வேண்டும். அந்த சூழலை நேர்வழிபெற்ற கிலாஃபத்தின் மீள் வருகை ஒன்றினாலேயே உறுதிப்படுத்த முடியும் என்பதால் முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் இத்தகைய சவால்களிலிருந்து படிப்பினை பெற்று அதற்காக  பாடுபட முன்வர வேண்டும்.

 

 
 

யூத அரசுக்கும், அமெரிக்காவுக்கும் சேவகம் செய்ய பலஸ்தீனர்களின் இரத்ததை பயன்படுத்தும் சாத்தானிய அரசியல் நகர்வுகள்

பிரசுரங்கள் 03 நவம்பர் 2015

அண்மையில் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸையும், ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ்வையும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி

 
 

எமது உம்மத்