யூத அரசுக்கும், அமெரிக்காவுக்கும் சேவகம் செய்ய பலஸ்தீனர்களின் இரத்ததை பயன்படுத்தும் சாத்தானிய அரசியல் நகர்வுகள்

பிரசுரங்கள் 03 நவம்பர் 2015

அண்மையில் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸையும், ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ்வையும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி

சந்தித்திருந்தார். மறுபக்கம் இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவையும் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்த சந்திப்புக்களின் பிரதான நோக்கமாக அமைந்தது, தற்போது பலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை தணிப்பதும், ஜோர்தானுக்கும், பலஸ்தீன அதிகார சபைக்கும், மஸ்ஜிதுல் அக்ஸாவின் பகுதிகளில் வாழும் யூதர்களுக்கும் இடையில் இதுவரை காலமும் நிலவிய அதே சூழலை மீண்டும் மீள்நிறுவி அல் அக்ஸாவின் மீதான ஜோர்தானின் மேற்பார்வையை மீண்டும் நிலைநாட்டுவதாகும். மேலும் ஜோர்தான் மன்னர்  அப்துல்லாஹ், நெதன்யாகு நிலைமையை பழைய நிலையிலேயே(தற்போது தோன்றிலுள்ள பதற்றத்திற்கு முன்பிருந்த நிலைக்கு) தொடர விரும்புவதாகவும், அல் அக்ஸாவில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக முஸ்லிம்கள் சமூகம் தருவதையும், முஸ்லிம் அல்லாதவர்கள் அல் அக்ஸாவுக்கு தரிசனத்திற்காக வருவதையும் உறுதிப்படுத்துவதாக அண்மையில் தெரிவித்த கருத்தை வரவேற்றிருந்தார்.

 

 

ஹிஸ்புத் தஹ்ரீர் - பலஸ்தீன் இந்த சந்திப்புக்களையும், இந்த சந்திப்புக்களின் எட்டப்பட்ட முடிவுகளையும் முற்றாக நிராகரிப்பதுடன், பின்வரும் கருத்துக்களை முன்வைக்க விருப்புகிறது.

 

அமெரிக்காவின் இந்த முன்னெடுப்பு, நிராயுதபாணிகளான பலஸ்தீன மக்களின், ஆக்கிரமிப்புக்கு எதிரான  போராட்ட வீரியமும், தியாகமும்;, ஒப்பற்ற வீரமும்; வெளிப்பட்டுள்ள சூழலில், சியோனிச இஸ்ரேலிய அரசின் பலகீனமும், அதன் துருப்புக்களின் கோழைத்தனதும் நிதர்சனமாகியிருக்கும் நிலையில், நயவஞ்சகமான பலஸ்தீன அதிகார சபையும், ஆட்சியாளர்களும் கதிகலங்கிப்போயுள்ள காலத்தில், பலஸ்தீன மக்களும், முஸ்லிம் உம்மாஹ்வும்  ஆக்கிரமிப்பை முற்றாக அகற்றி, அல் அக்ஸாவையும் முழு பலஸ்தீனத்தையும் மீட்பதற்காக முஸ்லிம் இராணுவங்களை சியோனிச இஸ்ரேலிய அரசுக்கு எதிராக களமிறங்குமாறு அறைகூவும் தருணத்தில் இடம்பெறுவதை நாம் அவதானிக்க வேண்டும்.

 

பலஸ்தீனத்தின் மீதான முழுமையான ஆக்கிரமிப்பை வெறும் அல் அக்ஸாவை மேற்பார்வை செய்யும் விடயத்தோடும், அங்கே வழிபடும் அம்சத்தோடும் மாத்திரம் மட்டுப்படுத்துவதன்; ஊடாக இந்த அரசியல் நகர்வு, அல் அக்ஸா தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையின் அடிப்படையான, முழு  பலஸ்தீன மக்களின் சொல்லொண்ணா துயரங்களுக்கும், இடப்பெயர்வுக்கும் காரணமான இஸ்ரேலிய  ஆக்கிரமிப்பு குறித்த கேள்வியை மட்டம் தட்டுகிறது.

 

மஹ்மூத் அப்பாஸ், ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது பலஸ்தீனப் பிரச்சனையையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களின் நியாயமான எழுச்சியையும் ”இந்த இளைஞர்கள் ஆத்திரத்துடன் இருக்கின்றனர், நம்பிக்கையிழந்திருக்கின்றனர், அவர்களுக்கு சுதந்தி;ரம் தேவைப்படுகிறது” என்று கூறி, இவை வெறும் விரக்தியடைந்த ஒரு கூட்டத்தின் செயலாகச் சித்தரித்து கொச்சைப்படுத்தியுள்ளார். மேலும் அவர் பலஸ்தீன மக்களின் முழுப் பாதுகாப்பையும், சர்வதேச பாதுகாப்பை (International Protection) கோருவது, சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை உருவாக்குமாறு கோருவது, ஜெருஸலம் தொடர்பான சர்ச்சையை பட்டியலில் முதன்மைப்படுத்தி, அகதிகள் மற்றும் கைதிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடிய இறுதித்தீர்வுக்கான கோப்பை (Final Solution Files) முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அரசியல் சூழலை உருவாக்குமாறு கோருவது என்ற அம்சங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ளார்.

 

ஜோன் கெரிக்கு, மஹ்மூத் அப்பாஸ் முன்வைத்திருக்கும் இந்த முன்மொழிவானது பலஸ்தீனத்தை புதியதொரு பாணியில் ஆக்கிரமிப்பு செய்யுமாறு கோரும் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கை, யூத  ஆக்கிரமிப்பை முற்றாக ஆதரிப்பதுடன், பலஸ்தீன மக்களின் கோபத்திலிருந்து அதனை பாதுகாக்க நினைக்கிறது. உம்மத்தும், அதனது இராணுவமும் யூத அரசுடன் நேரடியாக மோதி முழு பலஸ்தீனத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அது இல்லாது செய்ய நினைக்கிறது.  சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை அமைக்குமாறு கோருவது யெனின் மனிதப்படுகொலைக்கும் கோல்ட்ஸ்டோன் அறிக்கைக்கும்;  நடந்ததைப்போல,   காஸாவில் யூத அரசு இழைத்த குற்றங்களுக்கு நடந்ததைப்போல இந்த உண்மைகளையும் மழுங்கடிப்பதற்கு கையாளப்படும் சிறந்த யுக்தியாகும்.

 

புதிய அரசியலுக்கான பாதையை திறப்பது என்பதும், இறுதித்தீர்வுக்கான கோப்பை முடிவுக்கு கொண்டு வருவது என்பதும் பலஸ்தீனர்களின் நியாயமான கோரிக்கையை முற்றாக புறந்தள்ளி அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலை அங்கே நிறுவி, பெரும்பான்மையான பலஸ்தீன பூமியில் யூத ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தும் கோரிக்கையாகும். இதற்கு கைமாறாக, மிகக்குறுகிய ஒரு நிலப்பரப்பில் அமைந்த இறைமையைக் கொண்டிராத, தனது அடிப்படைப் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் கூட பூர்த்தி செய்ய முடியாத பலஸ்தீன அதிகார அலகு ஒன்றை அல்லது பெயரளவிலான நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே அப்பாஸின் கையாலாகாத விண்ணப்பமாகும்.

 

நெதன்யாகுவும், அவனது படையினரும், யூத குடியேறிகளும் தமது இரத்த வெறியாட்டத்தை  கட்டவிழ்ப்பதன் ஊடாக பலஸ்தீன மக்களை பீதி கொள்ளச் செய்து, தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்தி, புனித பூமியில் தமது இலக்கை அடைந்து கொள்ளும் விதமாக களத்தில் ஒரு புதிய யதார்த்தத்தை நிறுவ எத்தனிக்கின்றனர். எனினும் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற பலஸ்தீன மக்களின் ஒவ்வொரு குருதித்துளியும் பலஸ்தீனின் பூரண விடுதலையையே கோரி நிற்கிறது. இந்த தியாகங்களால் கொடூர யூத ஆக்கிரமிப்புக்கு ஒரு முடிவு கட்டப்பட்டு பலஸ்தீன மக்கள் ஏனைய முஸ்லிம் உம்மத்துடன் இணைந்து பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகும். பலஸ்தீனும், அல் அக்ஸாவும் இஸ்லாமிய உம்மத்தின் இறைமைக்குள் உள்வாங்கப்பட்டு முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத்தளங்கள் மாத்திரமல்லாது கிருஸ்தவர்களின் புனிதத்தளங்களும் நிர்மூலமாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படும்.

 

இந்த பலஸ்தீன அதிகார சபையும், சுற்றியிருக்கும் மன்னர்களும், ஆட்சியாளர்களும் ஒன்றை மனதில் நிறுத்தி வைத்திருக்கட்டும்...

 

இந்த உம்மத்தின் மைந்தர்கள் இந்த ஆட்சியாளர்களை வரலாற்றின் குப்பைத்தொட்டிகளில் புதைத்து விட்டு, அல்லாஹ்(சுபு) இறைமையை பூமியில் நிலைநாட்டுகின்ற கலீஃபா ஒருவருக்கு சத்தியப்பிரமாணம் செய்வதற்காக இரவும், பகலுமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். குப்பார்கள் வெறுத்தபோதிலும், உம்மத்திலிருந்தும், அதன் இராணுவத்திலிருந்தும் தக்பீர் முழக்கத்துடன் அணிதிரளும் அந்த கலீஃபாவின் படை, பலஸ்தீனத்தின் ஒரு அங்குல நிலத்தைதானும் யூத ஆக்கிரமிப்புக்கு விட்டுவிடாது இஸ்லாத்தின் ஆளுகைக்குள் பூரணமாக மீட்டெடுக்கும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை இவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கட்டும்!

 

(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையேஇ அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும்இ கிருபையாளனாகவும் இருக்கின்றான். (அல் அஃராப்:167)


ஹிஸ்புத் தஹ்ரீர் - ஊடகப்பிரிவு, பலஸ்தீனம்.

திங்கள், முஹர்ரம், 13ஆம் திகதி, ஹி. பி. 1437

26/10/2015

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh