மாதிரி அரசியலமைப்பு

எதிர்காலம் கிலாஃபத்திற்கே!

மாதிரி அரசியலமைப்பு 03 மார்ச் 2015

நாகரீகங்கள் எழுவதும், வீழ்வதும் வரலாற்றில் என்றும் மெய்ப்படுத்தப்பட்டுவரும் உண்மை. அறியப்பட்ட முழு உலகையும் தனத ஆளுகைக்குள்கொண்டுவரலாம் என நினைத்த எத்தனையோ நாகரீகங்கள் உலகில் எத்தவொரு தடயத்தையும் விட்டுவைக்காமல் அழிந்து மண்ணோடு மக்கிப்போன காட்சிகள், வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் புதைந்த கதைகள் ஏராளம். இவ்வாறான ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்பத்தை இன்றும் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். உலகில் தோன்றிய அசிங்கமான நாகரீகங்களின் ஒட்டுமொத்த வடிவமான மேற்குலக நாகரீகமும் தற்போது அந்த திருப்பத்தை அனுபவிக்கிறது. அதன் இறுதி மூச்சுக்களின் தணலை உலகம் உணர ஆரம்பித்திருக்கிறது. எனினும் உலகின் அதிகார வெற்றிடம் இன்றோ, நாளையோ இடறி விழவிருக்கும் முதலாளித்துவ மேற்குலகின் எச்சங்களான அரசுகளால் நிரப்பப்பட்டிருப்பது நிகழ்வுகளை ஊடுருவிப்பார்க்கும் ஆற்றலை எம்மில் இழக்கச் செய்துவிடக்கூடாது. அதிவேகமாக சரிந்து விழும் இன்றைய உலகத்தலைமை உருவாக்கும் அதிகார வெற்றிடத்தை ஒரேயொரு அசுர பலம்தான் நிரப்ப இருக்கிறது. அதனை தடுக்க எந்தவொரு வல்லரசும் இனி சக்தி பெற மாட்டாது. முதலில் முதுகில் குத்தப்பட்ட காயங்களுடனும், பின்னர் மார்பில் ஏவப்பட்ட அம்புகளுடனும் வீழ்ந்து சாய்ந்து கிடந்த அந்த அசுர பலம் சட்டென செங்குத்தாக எழுந்து நிற்கிறது. அந்த பலம் வேறொன்றுமில்லை. அது இஸ்லாம் எனும் சத்திய பலம்.

80 களின் இறுதியில் கம்யூனிச சோவியத் யூனியன் சுக்குநூறாக இடிந்து விழுந்துகொண்டிருந்த போது 'இது வெறும் பனிப்போரின் முடிவல்ல@ இது வரலாறின் முடிவு" என கூறிய அமெரிக்க அரசியல் விஞ்ஞானி பிரான்ஸிஸ் புகயாமா மேற்குலகின் தாராண்மைவாத முதலாளித்துவ ஜனநாயகமே உலக சமூகத்திற்கான ஒரே விமோசனமும், இறுதி தீர்வுமாகும் என வாதிட்டதை நாம் அறிவோம். எனினும் 2008 இல் முதலாளித்துவ உலகம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது 'ஒரு அசுரன் சரிந்து விழுவதை நாம் சான்று பகிர்ந்துகொண்டிருக்கிறோம்" என முதலாளித்துவத்தின் இயலாமையை அவர் ஒப்புக்கொண்டபோது அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் சிலந்தியின் வீட்டை குப்ரின் கோட்டைக்கு உவமைப்படுத்திய கூற்றே மனத்திரையில் விழுந்தது.

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது. அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது. ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே! ( _ரத்துல் அன்கபூத்:41)

மேற்குலகு கட்டிய முதலாளித்துவக்கோட்டை வெறும் மணற்குதிரை என்பதை அதன் நிர்மாணிகளே அடிக்கடி நிரூபிக்கிறார்கள். பலகோடி மக்களை நரபலி கொடுத்து, மனித விழுமியங்களை குழிதோண்டிப்புதைத்து, முழுப்புவியையும் கூவக்கிடங்காக்கி அதில் வீசும் நாற்றத்திற்கு மாத்திரம் நறுமணம் தெளிக்கவே இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. எனினும் மனிதகுல எதிரிகளான இவர்களை நீதி முன் நிறுத்த எவராலும் முடியவில்லை. எவரையும் அவர்கள் அதற்கு அனுமதிக்கவுமில்லை. எனினும் அவர்கள் மனதின் ஆழத்தில் ஒரேயொரு நெருடல்தான் அடிக்கடி கிலியைக் கிளப்பியது. அது இஸ்லாம் என்ற சித்தாந்தத்தின் ஆன்ம பலம் பற்றியது. பல நூற்றாண்டுகள் உலக ஒழுங்கைத் தீர்மானித்த இஸ்லாத்தை வெறும் புரோகித இஸ்லாமாக தரக்குறைப்பு செய்ய அவர்கள் மேற்கொண்ட அத்தனை பிரயத்தனங்களுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். எனினும் அவர்கள் எதிர்பாராதவிதமாக காலச்சக்கரம் அவர்களுக்கு எதிராக மிக விரைவாக சுற்றியது.

2012 இல் அரபுலகில் அரசியற் காலநிலை மாறியது. அது அரபு வசந்தமாக வீசத்தொடங்கியபோது முதலாளித்துவ சக்திகள் ஒரு பூகம்பமே புறப்பட்டு வருவதைக் கண்டார்கள். வாசிங்டனினும், லண்டனிலும், பரிசிலும் குந்தியிருந்த அவர்களின் வயிற்றில் இது புளியைக் கரைத்தது. டினூசியா தொடங்கி சிரியா வரை தொடரும் முஸ்லிம்களின் எழுச்சியை வெறும் ஆட்சி மாற்றக் கோஷங்களாக அவர்கள் பார்க்கவில்லை. நூற்றாண்டு காலமாக தாம் பதித்த இரும்புக் காலணியை எட்டி உதைத்த சம்பவங்களாகவே பார்க்கிறார்கள். இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்கு பின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போலிமுகத்துடன் இஸ்லாத்திற்கு எதிராக தாம் விரித்த வளைக்குள் தாமே சிக்குண்ட மேற்குலகு, உலக பொருளாதார நெருக்கடி, அரபுப் புரட்சி எனத் தொடரும் அரசியல் நெருக்கடியால் மூச்சுத்திணறி நிற்கிறது.

இவ்வாறு விருட்சமாய் நிமிர்ந்து நின்ற மேற்குலகை முழந்தாழிட செய்ய உலக முஸ்லிம்கள் செலுத்திய விலையோ மிக அதிகம். விலை பெரிதாக இருந்தாலும் விளைச்சல் எமக்குச் சாதகமாக அமைய வேண்டும். அது சாதகமாக அமைந்து விடக்கூடாது என்றுதான் இன்;றும் தமது அடியை நக்கி ஆட்சிபுரியும்; முகவர்களை பயன்படுத்தி முஸ்லிம் உலகில் தனது இறுதி ஜீவமரணப்போராட்டத்தை மேற்குலகு தொடர்கிறது. உருவான அரபுப்புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக மாற விடாது செய்து அதனை திசைதிருப்பியதன் ஊடாக டினூசியாவிலும், லிபியாவிலும், யெமனினும், எகிப்திலும் அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகாதது, இன்னும் மூச்சுவிட அவர்களுக்கு அவகாசத்தை தந்திருக்கிறது. எனினும் சிரியப்புரட்சி அவர்களுக்கு செருப்படி கொடுத்து வரும் நிலையில் பிராந்தியத்தில் தோன்றியிருக்கும் அரசியற் காலநிலையை கட்டுப்படுத்தாது விட்டால் அதற்குள் தாம் தொலைந்து போய்விடுவோம் என்ற அச்சத்துடன் மேற்குலகும் அவர்களது அடிவருடிகளும் தூக்கம் தொலைத்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மறுபக்கத்தில் உலக முஸ்லிம்கள் தமது உண்மை எதிரிகள் யார் என்பதை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். தமது தலைவிதியை தாமே எழுத வேண்டும் என்பற்காக வீதிக்கிறங்கி யுத்த டாங்கிகளுக்கு முன் வெற்று மார்புடன் நிற்கத் துணிந்திருக்கிறார்கள். அநியாயக்கார ஆட்சியானுக்கு முன்னால் சத்தியத்தை உரைக்கும் முஸ்லிம் உம்மத்தின் உண்மை அடையாளம் தற்போது அவர்களில் தென்பட தொடங்கியிருக்கிறது. அரபுப்புரட்சி மக்கள் கருத்தின் பலத்தை அவர்களுக்குள் மீண்டுமொருமுறை உணர்த்தியிருக்கிறது. முஸ்லிம் உம்மாஹ் தனது புகழ்பெற்ற சொந்த வரலாற்றை திரும்பிப்பார்க்க தொடங்கியுள்ளது. சிலுவை யுத்தக்காரர்களையும், தாத்தாரியர்களையம் எவ்வாறு ஈமானிய பலம் கொண்டு தாம் எதிர்கொண்டோம் என்பதை முஸ்லிம்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். தனது அடிப்படை அடையாளமான இஸ்லாமிய அகீதாவுக்குள் நின்று தமது பிரச்சனை அனைத்துக்கும் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் புத்துயிர் பெற்றிருக்கிறது. தமக்குள் தேசங்களாக பிரிந்து தேசியவாதம் பேசி பிளவுபட்டு நிற்பது மாபெரும் தவறு என்பதை அவர்கள் உணர தலைப்பட்டுள்ளார்கள். மாறாக ஒரே உம்மாஹ் என்ற எண்ணக்கரு அவர்களுள் வேறூன்றி வளர்ந்து வருகின்றது. உலக பொருளாதார நெருக்கடி தொடக்கம் பூகோள அமைதி வரை இஸ்லாத்திடம் மாத்திரம்தான் தீர்வு இருக்கிறது என்பதை அவர்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். எவையெல்லாம் நடந்து விடக்கூடாது என்று மேற்குலகு தமது விரல்களைக் கடித்துக்கொண்டிருந்ததோ அவை எல்லாம் தற்போது அவர்களின் கண்ணெதிரே நடக்கிறது.

முதலாம் உலகப்போரைத் தொடர்ந்து கிலாஃபத்தை அழித்ததன் பின்னால் அந்நாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் கேர்சன் 'நாம் இஸ்லாத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டோம்@ எனினும் முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் அரசியல், பொருளாதார, கலாசார ரீதியில் மீண்டும் ஐக்கியப்படுவதை அனுமதிக்கக் கூடாது." எனக்கூறிய கூற்று அவர்களின் உண்மை மனநிலையை எமக்கு கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது முஸ்லிம்கள் இஸ்லாமிய அடையாளத்துடன் ஐக்கியப்பட்டு ஒரு உம்மத்தாக எழுந்து நின்றால் அவர்களை உலகின் எந்த நாகரீகமும், எந்த வல்லரசும் வெற்றி கொள்ள முடியாது என்ற அவர்களின் உறுதியான நம்பிக்கையே அது.

எனினும் எவ்வாறு அல்லாஹ்(சுபு) இந்த உலகில் நிரந்தரமான பௌதீக விதிகளை வைத்திருக்கிறானோ அதேபோன்று ஒரு சமூகவியல் விதியையும் நிரந்தரமாக வைத்திருக்கிறான். அதுதான் அசத்தியத்தை அழித்து சத்தியம் இறுதியில் வெல்லும் என்ற பொதுவிதி. அந்த விதி மீண்டுமொருமுறை உயிர்பெற தற்போது களம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இதுவரை நயவஞ்சகத்தனமாக எதிர்த்த முதலாளித்துவ மேற்குலகு தமது பழைய பாணியில் நேரடியாகவே எதிர்ப்பதில் களமிறங்கியிருக்கிறது. அதிகரித்து வரும் இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்கள், முஸ்லிம் பிராந்தியங்களை குறிவைத்து நிலைகொண்டுள்ள மேற்குலக துருப்புக்கள் என்பன புதிய உலக ஒழுங்கொன்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக இருப்பதை மிக விரைவில் அவர்கள் எதிர்பார்ப்பதையே காட்டுகிறது. கிலாஃபத் பற்றிய பேச்சுக்கள் மேற்குலக அதிகார அரண்மனைகள் எங்கும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. உலகின் முக்கிய ஊடகங்களும், சிந்தனை மையங்களும் கிலாஃபத் குறித்து பேசாவிட்டால் நடைமுறையை பேசாது விடுவதுபோல் கருதுகிறார்கள். மேற்குலக அரசியல் அவதானிகள் சிலர் கிலாஃபத் என்பது இனிமேல் அரசியல் யதார்த்தம். எனவே கிலாஃபத் உருவாகுமா? உருவாகாதா? என்ற வாதங்களில் எமது காலத்தை விரயமாக்காமல் அதனுடன் முதலாளித்துவ உலகு எவ்வாறு உறவாடப்போகிறது பற்றி சிந்திப்பதே சிறந்தது என்ற கருத்தைக் கூறிவருகிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் மத்தியிலும், அரசியல் அவதானிகள் மத்தியிலும் கிலாஃபத் பற்றிய சிந்தனை வளர்வதை சகித்துக்கொள்ள முடியாத மேற்குலகிற்கு கிலாஃபத்தை கொச்சைப்படுத்த ஐஎஸ்ஐஸின் கொடிய செயற்பாடுகள் மாத்திரமே கடைசி புகழிடமாக மாறியிருக்கிறது. பக்தாதியின் இஸ்லாமிய அடிப்படையற்ற கிலாஃபா அறிவிப்பின் சாயம் தற்போது வெளுத்துக்கொண்டு வரும் நிலையில் தற்போது முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் அந்த உயரிய கிலாஃபததுர் ராஷிதா எது என்பது குறித்த தெளிவு பிராந்தியத்திலும், உலக முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறு உலகில் மிக வேகமாக மாறிவரும் அரசியல் காலநிலை எமக்கு ஒன்றையே சுட்டிக்காட்டுகிறது. அதுதான் இன்று உலகு கிலாஃபத்தை வரவேற்ற தயாராகிவிட்டது. முதலாளித்துவம் அதன் முன்னால் மூக்குடைபட்டு விழப்போகிறது. தலைகீழாய் உருமாறவிருக்கும் உலக அரங்கில் நாம் எப்பக்கம் நிற்கப்போகிறோம் என்பதே எம்முன்னால் இருக்கும் பிரதான கேள்வி. நாம் இஸ்லாத்தின் வெற்றியின் பங்காளி ஆக உண்மையில் விரும்பினால் கிலாஃபத்தை நோக்கிய உம்மத்தின் நீண்ட பயணத்தின் இறுதித் தருணத்திலாவது எமது பாதங்களையும் பதித்துக் கொள்வோம்! இன்றுடன் (மார்ச் 3ஆம் திகதி) கிலாஃபத் அழிக்கப்பட்டு 91 இருண்ட ஆண்டுகளை கடந்து வந்த நாம் அது பற்றி தீவிரமாக சிந்திப்பதற்கு இந்நாள் ஒரு சிறப்பான தரணம் என நாம் கருதுகின்றோம்.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான் (_ரத்துஸ் ஸஃப்ஃபு: 8)