முஸ்லிம் உம்மாவிற்கு பொதுவாகவும் அதிகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையிலும் ஹிஸ்புத்தஹ்ரிர் விடுக்கும் இறுதி தருணத்திற்கு முந்தைய அழைப்பு!

பிரச்சனைகள் 19 ஜூலை 2015

புகழனைத்தும் ஏக இறைவனான அல்லாஹ்(ஸுபு)‎வுக்கே உரித்தாகுக! சாந்தியும் சமாதானமும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் மீதும்

அவர்களுடைய குடும்பத்தார் மீதும், உத்தம தோழர்கள் மீதும் அவர்களுடைய வழியை பின்பற்றுவோர் மீதும் ஏற்படுவதாக! ஆமீன்!

 

கண்ணியமிக்கமுஸ்லிம்சகோதரர்களே! சகோதரிகளே!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உங்கள்மீது ஏற்படுவதாக! ரஹ்மத் பொருந்திய இந்த ரமளான் மாதத்தில் உங்களை நோக்கி இந்த அழைப்பை விடுக்கின்றோம், நோன்பு நோற்கும் புனிதமிக்க இந்த மாதம் குறித்து அல்லாஹ்(ஸுபு) இவ்வாறு கூறுகிறான்,

شَهْرُرَمَضَانَالَّذِيأُنْزِلَفِيهِالْقُرْآَنُهُدًىلِلنَّاسِوَبَيِّنَاتٍمِنَالْهُدَىوَالْفُرْقَانِ

“ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் அல்குர்ஆன் அருளப்பட்டது,அது (நன்மைதீமையை) பிரித்தறிவித்து நேரான வழியை தெளிவாக்கக்கூடிய(வசனங்களைபெற்றுள்ள)து” (அல்பகரா : 185)

அதுபேலவே, ஹதீஸ் குத்ஸியில் எல்லாம்வல்ல அல்லாஹ்(ஸுபு) கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது,

நோன்பை தவிர்த்து ஆதமின் மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும், நோன்பு எனக்குரியதாகும்,அதற்குரிய கூலியை நானே வழங்குவேன்(அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரளி) நூல் : புஹாரி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

“ரமளான் மாதம் தொடங்கும் போது சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன,நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்” (அறிவிப்பாளர் :அபூஹுரைரா(ரளி), நூல் : முஸ்லிம்)

இந்த அழைப்பிற்காக உங்கள் இதயங்களை திறக்கவேண்டும் என்றும் உங்கள் செவிகள் அதை செவியுறவேண்டும் என்றும் அதன்வாயிலாக அல்லாஹ்(ஸுபு) சிறப்பித்துக்கூறும் தேர்ந் தெடுக்கப்பட்ட மக்களில் நீங்கள் ஆகவேண்டும் என்றும் மகத்துவமும் வல்லமையும் பொருந்திய ஏக இறைவனான அல்லாஹ்(ஸுபு)விடம் இறைஞ்சுகின்றோம்!

الَّذِينَيَسْتَمِعُونَالْقَوْلَفَيَتَّبِعُونَأَحْسَنَهُأُولَئِكَالَّذِينَهَدَاهُمُاللَّهُوَأُولَئِكَهُمْأُولُوالْأَلْبَابِ

“அவர்கள் எத்தகையவர்கள் என்றால் பேச்சுக்களை செவிமடுத்து அதில் மிக அழகியதை பின்பற்றி நடப்பார்கள்.இத்தகையவர்களையே அல்லாஹ் நேரானபாதையில் செலுத்துகிறான் அன்றியும் இவர்கள் தாம் அறிவுடையவர்கள் ஆவார்கள்” (அஸ்ஸுமர் : 18)

கண்ணியமிக்கமுஸ்லிம்சகோதரர்களே! சகோதரிகளே!

முஸ்லிம்களாகிய நம்மீது ஏற்பட்டுள்ள அவலங்களையும் இன்னும் நம்மீது தொடர்ந்து ஏற்பட்டுகொண்டிருப்பவற்றையும் ஐயமின்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்! நமக்கு எதிராக காலனியாதிக்க குஃப்ர் அரசுகள் ஒன்றுகூடியிருக்கின்றன, பேராசை கொண்டுள்ள ஒவ்வொரு ஆன்மாவும் நமது மண்ணிண்மீது தகாத முறையில் இச்சை கொண்டுள்ளது, தீயநோக்கம் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனின் சுயநலத்திற்கும் நமது சமுதாயம் இலக்காக ஆகியிருக்கிறது! ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு வழியில்லாதவகையில் முஸ்லிம்கள் பிளவுபடுத்தப் பட்டுள்ளார்கள், தீங்கிலிருந்து தப்பிக்க இயலாத வகையில் நமது இரத்தம் ஓட்டப்படுகிறது, நமது வளங்கள் சூறையாடப்படுகின்றன, நமது நிலங்கள் அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கப் படுகின்றன! இல்லையில்லை! அதன் இதயத்தின்மீது சம்மட்டியால் அடிக்கப்படுகிறது!

அல்இஸ்ரா வல்மிஃராஜ் எனும் அற்புதம் நிகழ்ந்த பூமியாகவும் முதல் கிப்லாவாகவும் விளங்கும் அருள்வளம் பொருந்திய பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளார்கள்! அதில் அவர்கள் தாங்காளகவே ஓர் அரசை நிறுவிக்கொண்டுள்ளார்கள், அதில் சீர்கேடுகளையும் மிக பயங்கர நாசங்களையும் விதைத்துள்ளார்கள். அதன் மக்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்தும் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றினார்கள், அவர்கள் புனிதமாக கருதும் விஷயங்களை இழிவிற்கு உள்ளாக்கினார்கள், அவர்களை கொலை செய்தார்கள் அவர்களின் இரத்தை ஓட்டினார்கள் அவர்களின் பூமியில் தொடர்ந்து அட்டூழியங் களையும் அநீதிகளையும் கட்டவிழ்த்து வருகிறார்கள்! இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களின் இரத்தத்தை ஓட்டி அவர்களின் பூமியை அமெரிக்கா நாசத்திற்கு உள்ளாக்கிவிட்டது, நமது ஒவ்வொரு நிலப்பரப்புகளிலும் அது நமக்கெதிராக சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது! சூடானை பிளவுபடுத்தியது, இந்தோனீஷியாவிலிருந்து கிழக்கு தைமூரை பிரித்து விட்டது, சைப்பிரஸ் தீவின் பெரும்பாலன இடங்களை ஆட்சிபுரிவதற்கு கிரேக்கத்திற்கு உதவி செய்தது இன்னும் இதுபோன்ற எண்ணற்ற சதித்செயல்களை நமக்க எதிராக அரங்கேற்றி வருகிறது! இந்த அனைத்து சதிச்செயல்களிலும் அமெரிக்காவுடன் பிரிட்டன் கைகோர்த்து நிற்கிறது. முஸ்லிம்களை கொலை செய்வதிலும் அவர்களின் இரத்தத்தை ஓட்டுவதிலும் தன்னால் தனித்து நின்று செயல்படுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து தருணங்களிலும் பிரிட்டன் இந்த கொடுஞ் செயல்களை தானே முன்னின்று நடத்துகிறது. தனியாக நிற்கமுடியாத தருணங்களில் அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்கிறது அல்லது அதற்கு பக்கபலமாக இருந்துகொண்டு செயல்படுகிறது. இராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளில் நடந்த படுகொலைகளில் பிரிட்டன் அமெரிக்க அரசுடன் கைகோர்த்து நின்றது, அங்கு நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்களின் படுகொலையில் ஃப்ரான்ஸும் பங்கெடுத்துக்கொண்டு செயலாற்றியது. மத்திய ஆப்ரிக்கா போன்ற பிரதேசங்களில் தனியாகவும் மற்ற பகுதிகளில் தனது நேசநாடுகளுடன் இணைந்தும் ஃப்ரான்ஸ் முஸ்லிம்கள்மீது கொலைவெறி தாக்குதல்களை நிகழ்த்தியது!

இவற்றை தொடர்ந்து ரஷ்யாவும் கிரீமியா, காகஸஸ், செசென்யா, தாத்தர்ஸ்தான் மற்றும் சீனா போன்ற இடங்களில் முஸ்லிம்களை படுகொலை செய்தது. படுகொலைகள் மூலமும் சொல்லொணா கொடுஞ்செயல்கள் மூலமும் இந்துக்களால் ஆளப்படும் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் துருக்கிஸ்தான் போன்ற இடங்களில் இஸ்லாத்தின் மீதுள்ள பகையையும் வெறுப்பையும் அந்நாடு வெளிப்படுத்தியது. முஸ்லிம்கள்மீது நடத்தப்படும் படுகொலைகளில் மிகச்சிறிய நாடுகளும் இன்று பங்கெடுத்துக்கொள்கின்றன. உதாரணமாக பர்மா (மியான்மர்) முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக படுகொலைகளை நடத்தி அவர்கள் புனிதமாக கருதுபவற்றை இழிவு படுத்திவருகிறது, அங்குள்ள பெரும்பான்னை பௌத்தர்கள் முஸ்லிம்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்!

இதற்கும்மேலாக!

முஸ்லிம்களின் இரத்தம் காலனியாதிக்க காஃபிர்களால் மட்டும் ஓட்டப்படவில்லை மாறாக நமது சொந்த மக்களிலுள்ள மேற்கத்திய கங்காணிகளும் அவர்களின் அடிவருடிகளும் முஸ்லிம்களின் புனிதமான இரத்தத்தை ஓட்டுகிறார்கள்! முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டை யிட்டு இரத்தத்தை ஓட்டிக்கொள்ளும்படி சதித்திட்டம் மேற்கொண்டுவருகிறார்கள்! தாங்கள் நன்மையான செயலை செய்கிறோம் என்று எண்ணிக்கொண்டு அப்பாவி முஸ்லிம்கள் சிலரும் இந்த சதிச்செயலில் பங்குகொள்கிறார்கள்! இவ்வாறாக தங்களுடைய மோசமான எதிரியுடன் போரிடுவது போன்றே சிரியாவில் தங்களுக்குள் போரிட்டு வருகிறார்கள். அன்றைக்கு அறியாமைக் காலத்தில் சண்டையிட்டுக் கொண்டதைப் போன்று இராக்கில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறுதான் லிபியாவில் கடுமையாக போரிட்டுவருகிறார்கள், எமனில் வன்மையாக போரிட்டுக்கொள்கிறார்கள், எகிப்திலும் டுனீஷியாவிலும் சிற்சில மோதல்களை ஏற்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம்களின் வரலாற்றில் முன்னொரு காலத்திலும் நடைபெறாத வகையில் இஸ்லாமிய நிலப்பரப்புகளின் அனைத்து பகுதிகளும் இன்று வன்கொடுமைகளும் எண்ணற்ற கொடுங்குற்றங்களும் தலைவிரித்தாடுகின்றன!

இதற்கும்மேலாக!

காலனியாதிக்க காஃபிர்களாலும் அவர்களின் சதித்திட்டத்திற்கு உடந்தையாகவுள்ள முஸ்லிம்களும் நடத்தப்படும் இரத்தத்தை ஓட்டும் இந்த தாக்குதல்கள் முஸ்லிம்களின் உடலை மட்டும் சேதப்படுத்தவில்லை மாறாக அவர்களின் ஆன்மாவையும் இதயங்களையும் அழிவுக்கு உட்படுத்திவருகின்றன-! ஏமாற்றுதல், சதிச்செயல்கள், சதித்திட்டங்கள் மற்றும் பல்வேறு சூழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலமாக காலனியாதிக்க காஃபிர்கள் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டு கிலாஃபாவின் அழைப்பையும் அது தொடர்பான அழைப்புப்பணியை மேற்கொள்பவர்களையும் செயலிழக்கச் செய்தவதற்கு கடுமையாக பாடுபட்டு வருகிறார்கள்! சில தருணங்களில் இந்த காரியத்தை அவர்களே நேரடியாக செய்கிறார்கள், சிலதருணங்களில் தங்களின் கங்காணிகள் மூலமாக செய்கிறார்கள். கிலாஃபாவை நிறுவும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர்களை அடிபணிய வைக்கவும் அதை ஆதரிக்கின்ற மக்களை அவர்களிடமிருந்து தூரமாக்கவும் காலனியாதிக்க காஃபிர்களால் இயலாமல் போகும்போது முஸ்லிம்களில் சிலர் காஃபிர்களின் பணியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முன்வந்துவிடுகிறார்கள்! மாநாடுகளுக்கு மேல் மாநாடுகளை நடத்தி தாங்கள் பிரயோகிக்கும் வார்தைகளின் அர்த்தத்தை திரித்து கூறியும் கிலாஃபா என்பது வரலாற்று உண்மையாக இருக்கிறதே ஒழிய இஸ்லாமிய ஷரீஆவின் கட்டாய கடமையாக (வாஜிபு) இல்லை என்று பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள்!

இன்னும் சிலர் கிலாஃபா என்ற சிந்தனைக்கு எதிரான போரில் இதற்கும் ஒருபடி மேலாக சென்று அதை களங்கப்படுத்துகிறார்கள், அதன்பெயரால் பல்வேறு அக்கிரமங்களையும் கொடுஞ்செயல்களையும் கட்டவிழ்த்து வருகிறார்கள். கிலாஃபா போன்ற ஒன்றை நிறுவி யுள்ளதாக கூறிக்கொண்டு அதன் பெயரால் மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாத காரியங்களை செய்து வருகிறார்கள். இந்த கொடியசெயல்களை மக்களுக்கு எடுத்துக்காட்டி கிலாஃபா என்பது அக்கிரமங்களையும் வன்கொடுமைகளையும் கட்டவிழ்த்துவிடும் அமைப்பே யன்றி வேறில்லை என்று காலனியாதிக்க காஃபிர்களும் இஸ்லாத்தின் எதிரிகளும் இட்டுக்கட்டி பிரச்சாரம் செய்வதற்கு அவர்கள் வழியேற்படுத்தியிருக்கிறார்கள். இதன்மூலமாக கிலாஃபா என்பது உயர்ந்ததாகவும் ஒளிர்கின்ற உண்மையாகவும் இருக்கிறது என்ற மக்களின் நம்பிக்கை மிக்க கருத்தாக்கத்தை மாற்றி அது அடக்குமுறைகளை கொண்ட காரிருளாக இருக்கிறது என்ற எதிர்மறை கருத்தாக்கத்தை ஏற்படுத்தி கிலாஃபாவின் மீது வெறுப்பை ஏற்படுத்தவும் அதிலிருந்து மக்களை தூ£மாக்கிவிடவும் வழிவகைகளை தேடுகிறார்கள்!

எனவே முஸ்லிம்களின் இன்றையநிலை மென்மேலும் இருளையும் வீழ்ச்சியையும் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு காலனியாதிக்க காஃபிர்களின் செயல்பாடுகள் மட்டும் காரணமல்ல மாறாக, அவர்களுக்கு துணைநிற்பவர்கள் அல்லது அவர்களுக்கு ஒருபடிமேலே சென்றுவிட்டவர்கள், தங்களை இஸ்லாத்துடன் இணைத்து கூறிக்கொள்ளும் அதேவேளையில் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு சாதகமாக செயலாற்றிக்கொண்டிருப்பவர்கள், கிலாஃபாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்புபவர்கள் அல்லது அதன் பெயரால் தவறான கோஷங்களை எழுப்புபவர்கள் ஆகியோர்களின் செயல்பாடுகளும் அதற்கு காரணமாக இருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு பொதுவாகவும் அதிகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நாம் அழைப்பு விடுக்கிறோம்!

இன்றைய நமது நிலை அன்றையகால ஜாஹிலிய்யா அரபுகளை ஒத்ததாக உள்ளது! ஒரு ஒட்டகையின் நிமித்தம் அவர்கள் தங்களுக்குள் நாற்பது ஆண்டுகள் போரிட்டுக்கொண்டார்கள்! பெண் மக்களை உயிருடன் புதைத்தார்கள், கற்களாலும் மரத்தினாலும் தங்கள் கைகளால் செய்த சிலைகளை வணங்கினார்கள்! உண்மையில், அக்காலத்தில் பேரீத்தம் பழங்களால் சிலைகளை செய்வார்கள் பின்னர் பசி ஏற்படும்போது அதை உண்டுவிடுவார்கள்! எத்தகைய கவலைகளுமின்றி பொழுதுபோக்கின் பொருட்டு பாளைவனத்தில் பயணம் மேற் கொள்வார்கள், அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அவரை சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது மனித இனத்திற்கோ அவர்கள் எத்தகைய நற்செயலையும் மேற்கொள்ளவில்லை. அவர்களிலுள்ள நாகரீகமடைந்த மனிதர்களை பொருத்தவரை அக்காலகட்டத்தில் இருந்துவந்த இரு பேரரசுகளுக்கு விஸ்வாசமாக இருந்தார்கள். இராக்கில் இருந்த லக்மித் இனத்து மக்கள் பாரசீக அரசின் கூட்டாளியாக இருந்தார்கள் அதேவேளையில் ஷாமில் இருந்துவந்த கஸ்ஸானியர்கள் ரோம அரசின் கூட்டாளியாக இருந்தார்கள். பாரசீகர்கள் ரோமர்களை கலக்கமடைய செய்யும்போதோ அல்லது ரோமர்கள் பாரசீகர்களை கலக்கமடைய செய்யும் போதோ லக்மியாக்களும் கஸ்ஸானியர்களும் தங்களுக்குள் போரிட்டுக்கொள்வார்கள்! மக்கா வாசிகளை தவிர்த்து பாளைவன அரபுகளாக இருந்தாலும் அல்லது நாகரீகமடைந்த அரபுகளாக இருந்தாலும் அக்காலகட்டத்தில் இதுதான் அவர்களின் நிலையாக இருந்தது. மக்காவை பொருத்தவரை ஓர்ஆண்டிலுள்ள நாட்களின் எண்ணிக்கைக்கு நிகராக சிலைகளை உருவாக்கி வைத்திருந்தபோதும் அல்லாஹ்(ஸுபு) அதை அச்சமற்றதாக பாதுகாத்து வைத்திருந்தான்.

இவ்வாறுதான் ஜாஹிலிய்யா காலத்தில் அரபுகள் இருந்து வந்தார்கள், அற்பமான ஒன்றுமில்லாத காரணங்களுக்காக தங்களுக்குள் போரிட்டுக்கொண்டும் ஒருவரது இரத்தத்தை மற்றவர் ஓட்டிக்கொண்டும் இருந்தார்கள். நகரத்தில் வாழ்ந்தவர்களை பொருத்தவரை பல்வேறு தருணங்களில் அவர்கள் அற்பமான விஷயங்களுக்காக தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளா விட்டாலும் இருபெரும் பேரரசுகளின் நலன்களை பாதுகாப்பதற்காக போரிட்டுவந்தார்கள். தங்களுக்குள் ஒன்றுபட முடியாத வகையிலும் தங்களை தாங்களே போரிட்டு அழித்துக் கொள்வதை தடுத்துக்கொள்ள முடியாத வகையிலும் அவர்கள் பிரிந்து கிடந்தார்கள். அவர்களுடைய நிலை நாம் இன்றுள்ள நிலைக்கு ஒப்பாக இருக்கிறது அல்லது அவர்களின் நேற்றைய நிலையோடு நமது இன்றைய நிலை ஒத்திருக்கிறது என்று கூறலாம்.

இவ்வாறெல்லாம் இருந்தபோதும் அவர்களுடைய ஆட்சியாளர்கள் ஆண்மையின் பண்புகளை பெற்றிருந்ததால் பெண்களை மதித்து நடந்துகொண்டார்கள், அவர்களுக்கென்று தனிப்பட்ட கண்ணியத்தை பெற்றிருந்தார்கள், எனினும் இந்த பண்புகள்கூட இன்றைய முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களிடம் காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை காலகட்டத்தில் நடந்த ஒருநிகழ்வு இதற்கு உதாரணமாக இருக்கிறது. நபி(ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக இணைவைப்பவர்கள் நாற்பது வீரர்களை அனுப்பி யிருந்தார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய வீட்டில் நுழைவதற்கு முயற்சித்தபோது கதவு தாழிடப்பட்டு இருப்பதை கண்டார்கள். கதவை திறந்துகொண்டு வெளியில் வரும்போது அவர்களை(ஸல்) கொலைசெய்வதற்காக வீட்டை சுற்றி அமர்ந்துகொண்டார்கள் ஏனெனில் தாழிடப்பட்டிருக்கும் வீட்டில் வன்முறையாக நுழைவதற்கு அவர்களுடைய சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை! வீட்டின் உரிமையாளர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் அனுமதியின்றி உள்ளே நுழைவதற்கு பெண்களை மதிக்கும் அவர்களின் பண்பாடு இடம் தரவில்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களையும் அவர்களுடைய உளவாளிகளையும் பொருத்தவரை புனிதமாக கருதும் அனைத்து விஷயங்களிலும் அவர்கள் வரம்புமீறி நடந்து கொள்கிறார்கள். அவர்களின் கண்களில் எத்தகைய தடுமாற்றமும் இல்லாமல் வீட்டிலுள்ள வர்களின் அனுமதியோ அல்லது ஒப்புதலோ எதுவுமின்றி குடியிருப்பு வீடுகளை சூறையாடு கிறார்கள்! பெண்களையும் குழந்தைகளையும் பயங்கரத்திற்கு உள்ளாக்குகிறார்கள், தூக்கத்தில் அவர்கள் இருக்கும்போது அச்சுறுத்தல் ஏற்படுத்தி நடுங்கவைக்கிறார்கள்! ஏனெனில் இன்றைய ஆட்சியாளர்களும் அவர்களுடைய உளவாளிகளும் அவர்களுடைய சுயமரியாதையையும் வெட்கத்தையும் இழந்துவிட்டார்கள்! இந்த உண்மையை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்து கூறுகிறார்கள்,

“உங்களுக்குவெட்கம்இல்லையென்றால்நீங்கள்விரும்பியவாறுசெய்யுங்கள்” (புஹாரி)

முஸ்லிம்களுக்கு பொதுவாகவும் அதிகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நாம் அழைப்பு விடுக்கிறோம்!

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்துடன் அனுப்பப்பட்டார்கள், அதன் மூலமாக ஜாஹிலிய்யா இருளிலிருந்து அரபுகளை மறுமலர்ச்சி அடையச்செய்தார்கள், வீழ்ச்சியிலிருந்து அவர்களை மீட்டு உயர்நிலைக்கு கொண்டுசென்றார்கள், அவர்களின் செயலற்ற உறை நிலையிலிருந்து மீட்டு எழுச்சியுறச் செய்தார்கள், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவர்களை விழிப் படைய செய்தார்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போர்வீரர்களாக அவர்களை மாற்றினார்கள், நன்மையையும் நீதத்தையும் தாங்கிநின்ற இஸ்லாத்தின் மகத்தான செய்தியை சுமந்தவர்களாக பாருலகின் பரந்துவிரிந்த பிரதேசங்களில் அந்த மாவீரர்கள் பிரயாணித்தார்கள்! இவ்வாறாக அறியாமை இருளில் இருந்துவந்த அரபுமக்களை நபி(ஸல்) அவர்கள் உலகம் முழுவதற்கும் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச்செல்லும் அழைப்புப் பணியாளர்களாக மாற்றி னார்கள்!

இவையனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் குறுகிய காலத்தில் செய்துமுடித்தார்கள். துவக்கத்தில் இஸ்லாத்தின் செய்தியில் நம்பிக்கை கொண்டவர்களை அர்கம் இப்னு அர்கம் இல்லத்தில் ஒருகுழுவாக கூட்டி அவர்களுக்கு போதனை புரிந்தார்கள். பின்னர் சில வருடங்களில் மக்கா சமூகத்திற்கு அவர்களை பகிரங்கமாக அறிமுகப்படுத்தினார்கள். அதன் பின்னர் அந்த குழுவினர் அல்லாஹ்(ஸுபு)வை தவிர்த்து வேறொருவருக்கும் அஞ்சாமல் மக்களிடம் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய துவங்கினார்கள். அறிவார்ந்த போராட்டம் மற்றும் அரசியல் போராட்டம் ஆகியவற்றின் வாயிலாக சத்தியத்திற்கு பகிரங்கமாக சாட்சி கூறினார்கள். அவர்கள்மீது வந்து வீழ்ந்த அத்துனை துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள், தங்களின் நம்பிக்கையிலும் தீர்மானத்திலும் எத்தகைய பலவீனமோ சோர்வோ அடைந்துவிடாமல் அனைத்து வகையான தடைக்கற்களையும் மனஉறுதியுடன் தகர்த்தெறிந்த வாறு வீருநடைபோட்டார்கள்!

‘கவலையாண்டு’ என்று கூறப்படும் ஆண்டை அடையும்வரை இந்நிலை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த ஆண்டில்தான் நபி(ஸல்) அவர்களுக்கு உற்றதுணையாக இருந்த அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபு மரணமுற்றார், இதே ஆண்டில்தான் அவர்களின் அருமை துணைவியாகவும் மூஃமின்களின் அன்னையாகவும் விளங்கிய கத்திஜா நாயகியை அல்லாஹ்(ஸுபு) தனது அருளின்பால் அழைத்துக்கொண்டான். நபி(ஸல்) அவர்களின் வாழ் நாட்களில் மிகுந்த துக்கத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்திய இது நபித்துவத்தின் 10 வது ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் அல்லாஹ்(ஸுபு) நபி(ஸல்) அவர்ககளை இரண்டு நிகழ்வுகளை கொண்டு கண்ணியப்படுத்தினான், அவற்றில் இம்மைக்கும் மறுமைக்கும் உரிய சிறப்புகள் இடம்பெற்றிருந்தன!

இது நபித்துவத்தின் 10 வது ஆண்டாக இருந்தது. ‘அல்இஸ்ரா வல்மிஃராஜ்’ எனும் முதல் நிகழ்வின் வாயிலாக அல்லாஹ்(ஸுபு) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தினான், அந்த நிகழ்வில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து அல்குத்ஸிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்(ஸுபு) அழைத்துச்சென்றான், அங்கிருந்து அவர்கள் ஏழு வானங்களுக்கு அப்பால் உயர்ந்துசென்றார்கள், அங்கு அல்லாஹ்(ஸுபு) தனது தேர்ந்தெடுத்த அடியாருக்கு எவற்றையெல்லாம் அருள நாடினானோ அவற்றையெல்லாம் அருளினான். இரண்டாவது நிகழ்வாக அல்லாஹ்(ஸுபு) தனது தூதருக்கு(ஸல்) நுஸுராவை கோருவதற்கு அனுமதியளித்தான், அது இரண்டாவது அகபா உடன்படிக்கை மூலமாக நிறைவடைந்தது! அது நுஸுராவிற்குரிய பைஆவாகவும் ஆட்சிசெய்வதற்குரிய பைஆவாகவும் இருந்தது. நபித்துவத்தின் 13 வது ஆண்டு துல்ஹஜ்ஜு 13 ல் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து ஹிஜ்ரி முதலாண்டு ரபியுள் அவ்வலில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு இஸ்லாமிய அரசை நிறுவி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பையும் பலத்தையும் ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது எவ்வாறெனில், முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட நாட்காட்டியை (நீணீறீமீஸீபீமீக்ஷீ) நிறுவுவதற்கு முடிவு செய்தபோது உமர்(ரளி) முஸ்லிம்களை ஒன்றுகூட்டி ஆலோசனை மேற்கொண்டார். இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ராவும் அதைத்தொடர்ந்து நிறுவப் பட்ட இஸ்லாமிய அரசும் மிகமுக்கிய நிகழ்வுகளாகவும் மகத்தான மாற்றத்தின் துவக்கமாகவும் இருக்கின்றன என்று அவர்கள் முடிவுசெய்து அதனடிப்படையில் ஹிஜ்ரா நாட்காட்டியை நிறுவினார்கள்!

இவ்வாறுதான் இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது, அதன்பின்னர் அரபு தீபகற்பத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் இஸ்லாம் சுடர்விட்டு ஒளிரத்துவங்கியது. பின்னர் நேர்வழி காட்டப்பட்ட கலீஃபாக்களும் அதன்பின்னர் கலீஃபாக்களும் வந்தார்கள். இஸ்லாத்தின் பொருட்டு எண்ணற்ற நிலப்பரப்புகளை அவர்கள் திறந்துவிட்டார்கள், கிழக்கிலிருந்து மேற்காக இந்தோனீஷியாவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல்வரை உலகின் பல்வேறு பகுதிகளில் நன்மையையும் நீதத்தையும் பரப்பப்பினார்கள். ஜாஹிலிய்யாவின் அடிமைத்தளையிருந்த நிலப் பரப்புகளை விடுவித்து அவற்றில் இஸ்லாத்தின் நன்மையை பரப்புவதற்கு முஸ்லிம்கள் கடு முயற்சி மேற்கொண்டார்கள். உக்பா இப்னு நாஃபி இவ்வாறு கூறுகிறார், ‘அட்லாண்டிக் பெருங்கடலில் தனது குதிரையுடன் இறங்கிய அவர், “யாஅல்லாஹ்! இந்த கடலுக்கு அப்பால் நிலப்பரப்பு ஏதேனும் உள்ளது என்று நான் அறிந்திருந்தால் அதன்பொருட்டு கடற்பிரயாணம் மேற்கொண்டுடிருப்பேன்!” என்று கூறினார். மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது : ‘கடல்நீர் கழுத்தளவுக்கு உயரும் வரையில் அவர் கடலுக்குள் பாய்ந்து சென்றார், பின்னர் “யாஅல்லாஹ்! நான் இந்தகடலை தாண்டிச்செல்ல முடியவில்லை என்பதற்கு நீயே சாட்சியாக இருக்கிறாய்! இதை கடந்துசெல்வதற்கு ஏதேனும் உபாயம் இருந்திருந்தால் நான் அதை கடந்து சென்றிருப்பேன்!” என்று கூறினார்.

முஸ்லிம்களின் பலம் மென்மேலும் உயர்ந்து சிகரத்தை அடைந்துகொண்டிருந்த நிலையில் அவர்களின் உறுதியான நிலைப்பாடு தொடர்ந்து நீடித்துவந்தது. லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற வெற்றிக்கொடியின் கீழ் கிலாஃபா அரசு இஸ்லாத்தை கொண்டு ஆட்சிபுரிவதுதான் முஸ்லிம்களின் உண்மையான பலமாக இருக்கிறது என்பதை காலனியாதிக்க காஃபிர்கள் புரிந்துகொண்டார்கள், எனவே அந்த அரசை அழிப்பதற்கு தங்களுடைய அனைத்து முயற்சிகளையும் செலவிட்டார்கள். அக்காலகட்டத்தில் பிரிட்டன் குஃப்ர் அரசுகளில் முன்னணி அரசாக திகழ்ந்தது, கிலாஃபா அரசை வீழ்த்தவேண்டும் என்ற இலக்குடன் அது 18 ம் நூற்றாண்டு முதல் பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டி செயலாற்ற துவங்கியது. இறுதியாக அரபுகளிலும் துருக்கியர்களிலும் இருந்த சில துரோகிகளை பயன் படுத்தி இறுபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிலாஃபா அரசை நிர்மூலமாக உடைத்தெறியும் முயற்சியில் வெற்றிகண்டது!

இத்தகைய துர்பாக்கியமான நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பின்னர் அவர்கள் தங்களுக்குள் பிளவுபட ஆரம்பித்தார்கள். வல்லரசுகளிலிருந்து சிற்றரசுகள் வரை இஸ்லாத்தின் எதிரிகளாக உள்ள காலனியாதிக்க அரசுகள் அனைத்தும் முஸ்லிம்களின் எல்லா நிலப் பரப்புகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றை மிதித்து துவைத்தன! தங்களின் அடிவருடி களாக இருந்த முஸ்லிம் துரோகிகளை காலனியாதிக்க காஃபிர்கள் இஸ்லாமிய பூமியில் ஆங்காங்கே ஆட்சியாளர்களாக அமர்த்திக் கொண்டார்கள்! அல்குர்ஆனின் கண்ணியம் சிதைக்கப்பட்டது எனினும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை! நபி(ஸல்) அவர்கள் இழிவு படுத்தப்பட்டார்கள், எனினும் அவர்களுடைய இரத்த நாளங்கள் புடைத்து இரத்தம் கொதிக்கவில்லை! முஸ்லிம்களின் கண்ணியத்திலும் அவர்கள் புனிதமாக கருதுகின்ற விஷயங்களிலும் எல்லை மீறப்பட்டது எனினும் இந்த ஆட்சியாளர்களின் இராணுவம் அதனுடைய முகாமில் அசைவற்று நின்றிருந்தது! இந்த ஆட்சியாளர் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சொந்த மக்களுக்கு எதிராக தங்கள் இராணுவத்தை பிரயோகம் செய்தார்களே ஒழிய முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக அதை பிரயோகிக்கவில்லை! பலவீனர்களிடம் சிங்கம் போல பாயும் இந்த ஆட்சியாளர்கள் எதிரிகளிடம் கோழைகளாக தலைகுனிந்து நிற்கிறார்கள்! இதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலையாகும்!

முஸ்லிம்களுக்கு பொதுவாகவும் அதிகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நாம் அழைப்பு விடுக்கிறோம்!

முதற்கட்டமாக இஸ்லாத்தின் வெற்றிக்கொடியின் கீழும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற பதாகையின் (தீணீஸீஸீமீக்ஷீ) கீழும் இஸ்லாத்தை கொண்டு ஆட்சிபுரியும் கிலாஃபா ராஷிதாவை ஏற்படுத்தவேண்டும். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் மேற்கொண்ட வழிமுறையில் அல்லாது வேறொன்றின் மூலமும் இதை சாத்தியமாக்க முடியாது. எனவே முதலில் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டுள்ள ஒருகுழுவை உருவாக்கவேண்டும், பின்னர் அந்தகுழு மக்களிடம் கருத்துறவாடுதல் மேற்கொண்டு இஸ்லாத்திற்கு ஆதரவாக பொதுஜனக்கருத்தை உருவாக்கவேண்டும், பின்னர் அதிகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களிடமிருந்து நுஸுராவை பெறவேண்டும். மகத்துவமிக்க அல்லாஹ்(ஸுபு) தனது நுஸுராவை வழங்கி இஸ்லாத்தின் ஆட்சியும் இஸ்லாமிய அரசும் நிறுவப்படும்வரை இந்த வழித்தடத்தில் அக்குழு பயணிக்கவேண்டும். இதுதான் நமது நிலையை சீர்படுத்தும், இதன்மூலமாக மட்டுமே உம்மாவை அதன் வீழ்ச்சியிலிருந்து மறுமலர்ச்சி அடையச்செய்ய முடியும். மகத்துவமிக்க எல்லாம்வல்ல அல்லாஹ்(ஸுபு) வெற்றியை நல்கும் வகையில் இஸ்லாத்தை உள்நாட்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தி இஸ்லாத்தின் செய்தியை தஃவா மூலமும் ஜிஹாது மூலமும் உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் கிலாஃபா ராஷிதாவை நிறுவுவதின் மூலமாக மட்டுமே உம்மாவை அதன் முந்தைய உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல முடியும்.

அல்லாஹ்(ஸுபு) கூறுகிறான்,

إِنَّالَنَنْصُرُرُسُلَنَاوَالَّذِينَآَمَنُوافِيالْحَيَاةِالدُّنْيَاوَيَوْمَيَقُومُالْأَشْهَادُ

“நிச்சயமாக நம்முடைய தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம், சாட்சிகள் வந்து சான்றுபகரும் அந்தநாளிலும் (மறுமைநாள்) உதவிசெய்வோம்” (அல்மூஃமின் : 51)

கிலாஃபாவிற்காக பணியாற்ற வேண்டியது கட்டாயம் என்பது வெற்றிக்கும் விடுதலைக்கும் உள்ள ஒரே வழியாக அது இருக்கிறது என்ற உண்மையை அறிந்து கொண்டதால் அல்ல! மாறாக முதலாவதாகவும் எல்லாவற்றிற்கு மேலாகவும் அது கட்டாயக்கடமை என்ற அடிப் படையில் மிகமுக்கியமான வாஜிபாக இருக்கிறது என்பதோடு, அது ஃபர்ளுகள் அனைத்திற்கும் தாயாகவும், ஃபர்ளுகள் அனைத்திற்கும் மகுடமாகவும், ஃபர்ளுகள் அனைத்திற்கும் அடிப்படை யாகவும் இருக்கிறது! அதைக்கொண்டுதான் ஷரீஆவை நடைமுறைப்படுத்த முடியும், இஸ்லாத்தின் ஹுதூதை நிலைநிறுத்த முடியும்! இது இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது! ஒரு வாஜிபை நிறைவேற்றுவதற்கு எது தேவையோ அது இல்லாமல் அந்த வாஜிபை நிறைவேற்ற முடியாது. கிலாஃபாவை நிறுவுவதும் கலீஃபாவை நியமனம் செய்வதும் மிகப்பெரும் வாஜிபாகும். உண்மையில் இதற்காக பணியாற்றுவதற்கு ஒருவருக்கு ஆற்றல் இருந்தும் அவர் அதை நிறைவேற்றவில்லை என்றால் அவர் பெரும்பாவத்தை செய்தவராக கருதப்படுகிறார் ஏனெனில் அவருடைய மரணம் ஜாஹிலிய்யா காலத்து மரணமாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

“எவர் தனது கழுத்தில் பைஆ இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலிய்யா மரணத்தையே அடைகிறார்” (முஸ்லிம்)

உண்மையில் கிலாஃபாவை நிறுவதும் கலீஃபாவை நியமிப்பதும் மாபெரும் கடமையாக இருக்கிறது. எனவேதான் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்பாக ஸஹாபா பெருமக்கள் ‎இது தொடர்பான தங்களின் கடமையை நிறைவேற்றினார்கள். கலீஃபாவை நியமிப்பதற்கு முன்பாக நபி(ஸல்) அவர்களின் தஃபன் ஏற்பாடுகள் எத்தகைய முன்னுரிமையையும் பெற்றுக் கொள்ளவில்லை! நபி(ஸல்) அவர்களின் உடலை அடக்கம் செய்தல் என்ற கடமையான செயலைவிட கலீஃபாவை நியமித்தல் என்ற கடமையான செயலுக்கு மூத்த ஸஹாபாக்கள் முக்கியத்துவம் அறித்தார்கள் என்ற வகையில் கிலாஃபாவை நிறுவுதல் என்பது மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டாய கடமையாக விளங்குகிறது.

மேலும் இமாம் எனப்படும் கலீஃபாவின் தலைமையின் கீழ்தான் கிலாஃபா அரசு அடிமைத்தளையில் சிக்கியுள்ள நிலப்பரப்புகள் அனைத்தையும் விடுவிக்கமுடியும்,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

“இமாம்என்பவர்கேடயமாவார், அவருக்கு பின்னால் நின்று முஸ்லிம்கள் போரிடுவார்கள் அவரைக் கொண்டே பாதுகாப்பை பெற்றுக் கொள்வார்கள்” (முஸ்லிம்)

இவ்வாறாக, கிலாஃபாவும் கலீஃபாவும் முஸ்லிம்களின் கேடயமாக இருக்கிறது, கலீஃபாதான் உண்மையான பாதுகாப்பாக இருக்கிறார், அத்தகைய பாதுகாப்பை பெற்றுள்ள ஒருவர் அல்லாஹ்(ஸுபு)வின் அனுமதிகொண்டு இறுதியில் அவனுடைய ஆதரவையும் வெற்றியையும் பெற்றுக்கொள்வார். அவர் தனது உரிமைகளையோ தனது நிலத்தையோ இழக்க மாட்டார், அவருடைய எதிரிகள் அவரிடம் நெருங்கமாட்டார்கள். கிலாஃபாவின் வரலாறு இதைத்தான் பறைசாற்றுகிறது! ஹிர்க்கல் எனப்படும் பைசாந்திய மன்னர்களின் ரோம பேரரசும் அவர்களின் விழுமிய செங்கோல்களும் எத்தகையது! கிஸ்ரா எனப்படும் ஸாசானிய மன்னர்களின் பாரசீக பேரரசும் அவர்களின் செங்கோல்களும் எத்தகையது! பசிஃபிக் பெருங் கடலிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல்வரை வியாபித்திருந்த அவர்களின் நிலப்பரப்புகளில் இஸ்லாமிய அரசையும் அதன் போர் வீராகளையும் அதன் நீதி வழுவா தன்மையையும் தவிர்த்து வேறெது தக்பீர் முழக்கத்தை கொண்டுசென்றது! இந்த இரு பெருங்கடல்களுக்கு அப்பால் கிழக்கிலும் மேற்கிலும் நிலங்கள் இருக்கின்றன என்று கிலாஃபா அரசு அறிந்திருக்கும் பட்சத்தில் மகத்துவமும் கீர்த்தியும் வல்லமையும் பெருங்கருணையும் பேராற்றலும் உள்ள அல்லாஹ்(ஸுபு)வின் அழைப்பை இந்த நிலப்பரப்புகளுக்கு எடுத்துச்செல்லும் கடும்பணியை அது நிச்சயமாக நிறைவேற்றி இருக்கும் என்பது உண்மையே!

முஸ்லிம்களுக்கு பொதுவாகவும் அதிகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நாம் அழைப்பு விடுக்கிறோம்!

ஹிஜ்ரி 1385 ரபியுஸ்ஸானி 20 | கி.பி 1969 ஆகஸ்ட் 17 ல் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்கு இந்த அழைப்பை விடுத்தோம்.

இஸ்லாத்தின் சிந்தனைகள் மற்றும் அதன் சட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றாமல் இருப்பது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் எச்சரிக்கை ஒலியை இந்த அழைப்பு எழுப்பியது ஏனெனில் இந்த அலறல் சப்தம் உண்மையாகவே முஸ்லிம்கள் அறிந்து கொள்வதற்கு சாத்தியமான வகையிலேயே அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் ஹிஸ்புத்தஹ்ரிர் முஸ்லிம்களின் வழிகாட்டியாக இருக்கிறது அது தனது சொந்த மக்களை தவறான பாதையில் இட்டுச்செல்லாது. இஸ்லாத்தின் சிந்தனைகள் மற்றும் அதன் சட்டங்கள் ஆகியவற்றில் முஸ்லிம்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு புத்துயிர் ஊட்டுவதற்கு இயன்றளவுக்கு அது போராடியது, இன்றைய தினத்தில் அது குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது! அகிலங்களின் இறைவனான அல்லாஹ்(ஸுபு)வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக!

ஹிஜ்ரி 1426 ரஜப் 28 |கி.பி 2005 செப்டம்பர் 2ல் இரண்டாவது முறையாக ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்கு இந்த அழைப்பை விடுத்தோம்.

கடுமையான அரசியல் சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்லாத்தை பொருத்து முஸ்லிம்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஆட்டியசைக்க வேண்டும் என்ற தங்கள் திட்டத்தை ஹிஸ்பும் உண்மையான முஸ்லிம்களும் நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்பதையும் கிலாஃபாவை மறுநிர்மாணம் செய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதையும் அமெரிக்காவின் தலைமையில் இயங்கிவரும் மேற்கத்திய நாடுகள் அறிந்துள்ளன. இதை மேற்கத்திய அரசுகள் அறிந்துகொண்ட பின்னர் சில தருணங்களில் நேரடியாகவும்  இன்னும் சில தருணங்களில் தனது கங்காணிகள் மூலமும் ஹிஸ்பின் மீது அவை நிகழ்தும் தாக்குதல்களை அதிகரித்தன. இப்போது கூட இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள வெளிப்படையான வெறுப்பின் காரணமாக இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகள் மீது ‘சிலுவையுத்தம்’ என்ற பெயரில் அவை போர் தொடுத்துள்ளன. இங்ஙனம் பொதுவாக முஸ்லிம்கள் மீதும் குறிப்பாக கிலாஃபா மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் அமெரிக்கா தலைமையிலுள்ள மேற்கத்தியர்கள் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டுள்ளார்கள் என்பதை நமது இரண்டாவது அழைப்பு தெளிவுபடுத்தியது. கிலாஃபா விற்காக பணியாற்றுவதை விட்டு முஸ்லிம்களை தடுத்துவிடவேண்டும் என்று இஸ்லாத்தின் எதிரிகள் விரும்புகிறார்கள் என்பதை இந்த அழைப்பு எடுத்துக்காட்டியது. இஸ்லாத்தின் தீர்ப்புகளை பின்பற்றினால், தீனுடைய விஷயத்தில் அல்லாஹ்(ஸுபு)விடம் உண்மையாக நடந்து கொண்டு வல்லமையும் பேராற்றலும் பொருந்திய அவனிடம் திரும்பினால், மேற்கத்தியர்களை முறியடிக்கும் ஆற்றலை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நாம் விளக்கமாக எடுத்துக் கூறினோம்.

கிலாஃபாதான் ஒரே தீர்வு என்று பெரும்பான்மை முஸ்லிம்களின் பெருங்கூட்டம் பொதுக்கருத்திற்கு வந்திருக்கும்இந்த நேரத்தில் இறுதி தருணத்திற்கு முன்புள்ள இந்த அழைப்பை உங்களை நோக்கி விடுக்கின்றோம்.

அன்ஸாரிகளும், ஸஃது இப்னு முஆதும்(ரளி) மார்க்கத்திற்கு உதவிசெய்ய முன்வந்ததை போன்று அல்லாஹ்(ஸுபு)வின் கட்டளையின் பெயரால் அன்ஸாரிகளை போன்றவர்களும் ஸஃது போன்றவர்களும் மார்க்கத்திற்கு உதவிசெய்ய முன்வரவேண்டியதை தவிர்த்து இப்போது வேறொன்றும் மீதமில்லை! கிலாஃபாவை நிறுவுவதற்காக பணியாற்றுபவர்களுக்கு ஆதரவு அளிப்பதின் மூலமும் ஹிஸ்புத்தஹ்ரிருக்கு ஆதரவு அளிப்பதின் மூலமும் மார்க்கத்திற்கு உதவி செய்வதற்கு அவர்கள் முன்வரவேண்டும், அதன்வாயிலாக இரண்டாது கிலாஃபா ராஷிதாவை நிறுவவேண்டும். அல்லாஹ்(ஸுபு)வின் வாக்குறுதியின் அடிப்படையில் நமது மத்தியிலுள்ள இந்த கொடுங்கோல் அரசுகளுக்குப் பின்னர் நபித்துவத்தின் வழியில் மீண்டும் கிலாஃபா ஏற்படும் என்பது நிச்சயமே!

وَعَدَاللَّهُالَّذِينَآَمَنُوامِنْكُمْوَعَمِلُواالصَّالِحَاتِلَيَسْتَخْلِفَنَّهُمْفِيالْأَرْضِ

“(மனிதர்களே) உங்களில்எவரேனும்உண்மையாக (இஸ்லாத்தில்)ஈமான்கொண்டுநற்செயல்கள்செய்துவந்தால்நிச்சயமாகஉங்களுக்குபூமியில்அதிகாரம்|தலைமைத்துவம்அளிப்பதாகஅல்லாஹ்வாக்குறுதிஅளிக்கிறான்” (அந்நூர் : 55)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் இதுகுறித்து நமக்கு நற்செய்தி அளித்துள்ளார்கள்,

“. . . . அதன்பின்னர்கொடுங்கோல்ஆட்சிஏற்படும்.அல்லாஹ்நாடும்வரைஅதுநிலைத்திருக்கும்பின்னர்அவன்நாடும்போதுஅதைஉயர்த்திவிடுவான்.பின்னர்நபித்துவத்தின்வழியில் (மீண்டும்) கிலாஃபாஏற்படும்” (அஹ்மது)

உங்களுக்கு மிகச்சிறந்தையே நாங்கள் விரும்புகிறோம், எனவேதான் இந்த அழைப்பை உங்களுக்கு விடுக்கிறோம். எனவே முஸ்லிம் சகோதரர்களே! அதிகாரத்தை பெற்றுள்ள முஸ்லிம்களே! விரைந்து செயல்படுங்கள்! கிலாஃபாவிற்கான தஃவாவில் பங்கெடுத்துக்கொண்டு உங்களுடைய நுஸுராவை அளியுங்கள்! ஹிஸ்புடன் இணைந்து கிலாஃபாவை நிர்மாணிப்பதில் விரைந்து செயலாற்றுங்கள், வெறும் பார்வையாளராக மட்டுமே நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் இரண்டு நிலைகளிலும் நன்மைகள் நிறைந்திருந்தபோதும் நீங்கள் இன்றைய தினம் இணைந்து செயலாற்றுவதால் அல்லாஹ்(ஸுபு)விடத்தில் பெற்றுக்கொள்ளும் உயர்வையும் நன்மையையும் நாளைய தினம் இணைந்து செயலாற்றுவதால் பெற்றுக்கொள்ள முடியாது!

لَايَسْتَوِيمِنْكُمْمَنْأَنْفَقَمِنْقَبْلِالْفَتْحِوَقَاتَلَأُولَئِكَأَعْظَمُدَرَجَةًمِنَالَّذِينَأَنْفَقُوامِنْبَعْدُوَقَاتَلُواوَكُلًّاوَعَدَاللَّهُالْحُسْنَىوَاللَّهُبِمَاتَعْمَلُونَخَبِيرٌ

“உங்களில் எவர் (மக்காவை) வெற்றி கொள்வதற்கு முன்னர் தனது பொருளை செலவு செய்து போர் புரிந்தாரோ அவர் மகத்தான பதவியை உடையவராவார். ஆகவே அதற்குப் பின்னர் தனது பொருளை செலவுசெய்து போர் புரிந்தவர் அவருக்கு சமமாக ஆகமாட்டார் எனினும்

இவ்விரசாராருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” (அல்ஹதீத் : 10)

இது இறுதி தருணத்திற்கு முன்பாக நாம் உங்களுக்கு விடுக்கும் அழைப்பாகும்! வல்லமை உடையவனும் மிகைத்தவனும் அடக்கி ஆள்பவனாகவும் உள்ள அல்லாஹ்(ஸுபு)வை தவிர்த்து வேறொருவருக்கும் நீங்கள் அஞ்சவேண்டாம். ‘நாங்கள் உங்களுக்கு ஆதரவு கொடுத்தால் அமெரிக்காவும் மேற்கத்திய அரசுகளும் எங்களுக்கு எதிராக நிற்கும்’ என்று கூறவேண்டாம்! ஏனெனில் ஈமான்கொண்டு அல்லாஹ்வின் வழியில் அணிவகுத்து நிற்பவர்களுக்கு முன்பாக எதிரிகள் நிலைகுலைந்து போய்விடுவார்கள் அவர்களின் பலமும் ஆற்றலும் நொருங்கிப்போய் விடும்!

அல்லாஹ்(ஸுபு) கூறுகிறான்,

وَكَانَحَقًّاعَلَيْنَانَصْرُالْمُؤْمِنِينَ

“மூஃமின்களுக்குஉதவிசெய்வதுநம்மீதுகடமையாகஇருக்கிறது” (அர்ரூம் : 47)

இது இறுதி தருணத்திற்கு முன்பாக நாம் உங்களுக்கு விடுக்கும் அழைப்பாகும்! உங்களுடைய உண்மையான பலம் குறித்தும் உங்களுடைய எதிரிகளின் பலவீனம் குறித்தும் உங்களுக்கு நாம் நினைவுறுத்துகிறோம். நீங்கள் முஸ்லிம்கள், உங்களுடைய இறைவனான அல்லாஹ்(ஸுபு)வின் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்! இஸ்லாம் உங்களுடைய தீனாக இருக்கிறது முஹம்மது(ஸல்) உங்களுடைய நபியாக இருக்கிறார், நீங்கள் உங்களின் இறைவனின் பொருட்டு பலமிக்கவர்களாக இருக்கிறீர்கள்!

لَاقُوَّةَإِلَّابِاللَّهِ

“அல்லாஹ்வுக்கேஅன்றி (வேறொருவருக்கும்) ஆற்றல்கிடையாது” (அல்கஹ்ஃப் : 39)

அன்றியும் உங்களுடைய தீனின் பொருட்டால் நீங்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாக இருக்கிறீர்கள்!

وَلِلَّهِالْعِزَّةُوَلِرَسُولِهِوَلِلْمُؤْمِنِينَ

“கண்ணியம் என்பது அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மூஃமின்களுக்கும் உரியதாகும்”(அல்முனாஃபிகூன் : 8)

நேர்வழிகாட்டப்பட்ட கலீஃபாக்கள், அந்தாலுஸ் நிலப்பரப்பை வெற்றிகொண்டு அதில் இஸ்லாமிய நாகரீகத்தை பரப்பியவர்கள் ஆகியோரின் பேரர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். ரோம வெறியன் ஒருவனால் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது ‘யா முஃதஸிம்!’ என்று அழைத்த ஒரு பெண்ணின் கண்ணியத்தை காக்கும் பொருட்டு வெற்றிகொள்ள முடியாத இராணுவத்தை அனுப்பிய அமீருல் மூஃமினீன் முஃதஸிம் பில்லாவின் பேரர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்! முஸ்லிம்களுடன் செய்துகொண்டு உடன்படிக்கையை முறித்த ரோம் நாட்டு மன்னனுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் தனது இராணுவத்தை பதிலளிப்பாக அனுப்பிய ஹாரூன் ரஷீதின் பேரர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்! அல்குத்ஸிலுள்ள சிலுவையுத்தக்காரர்களை வெற்றிகெண்ட ஸலாஹுதீன் என்ற மாவீரரின் பேரர்களாகவும், தாத்தாரியர்களை வெற்றிகொண்ட பேபர்ஸின் பேரர்களாவும் காண்ஸ்டான்டிநோபுளை வெற்றிகொள்ளும் பெருமையை அல்லாஹ்விடமிருந்து பெற்ற இளைஞரான முஹம்மது அல்ஃபாதிஹ் எனும் மாவீரரின் பேரர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள்! அவரைப்பற்றி,

அந்தஅமீர்எவ்வளவுசிறந்தஅமீராகஇருக்கிறார், அந்தஇராணுவம்எவ்வளவுசிறந்தஇராணுவமாகஇருக்கிறது”என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் சிறப்பித்து கூறினார்கள்.

சிறையிலிருக்கும் தங்களின் மன்னனை காப்பாற்றவேண்டும் என்று ஃப்ரான்ஸ் மண்டியிட்டு வேண்டுகோள்விடுத்த கலீஃபா சுலைமான் அல்கனூனியின் பேரர்களாகவும் மத்திய தரைக்கடல் வழியாக தங்களுடைய கப்பல்கள் பாதுகாப்பாக செல்லவேண்டும் என்பதற்காக அமெரிக்காவை அல்ஜீரியாவின் வாலியிடம் கப்பம்கட்ட வைத்த கலீஃபா சலீம் மிமிமி அவர்களின் பேரர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் குடியிருப்பு அமைத்துத்தர வேண்டும் என்றும் அதற்காக பலகோடி தங்கக்காசுகளை கிலாஃபா அரசின் கருவூலகத்திற்கு கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் யூதர்கள் மன்றாடியபோதும் அதற்கு ஆதாரவாக உலக வல்லரசுகள் வரித்துக்கட்டி நின்றபோதும் புனிதமண்ணில் ஒருதூசியைக்கூட அளிக்கமுடியாது என்று கூறிய கலீஃபா அப்துல் ஹமீதின் பேரர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். அவர் அன்று யூதர்களுக்கு கூறிய பதிலுரை மிகவும் பிரபலமானதாகும், “யூதர்கள் தங்களிடம் உள்ள கோடானுகோடி மதிப்புள்ள தங்கத்தை தாங்களே வைத்துக்கொள்ளட்டும். கிலாஃபா ஒருநாள் வீழ்த்தப்படுமானால் அப்போது அவர்கள் எத்தகைய விலையையும் கொடுக்காமலேயே பாலஸ்தீன பூமியை எடுத்துக் கொள்ளலாம்! எனினும் நான் உயிருடன் இருக்கும் வரையில் கிலாஃபா அரசிலிருந்து பாலஸ்தீனத்தின் ஒருபிடி மண்ணை எதிரிகள் எடுத்துக்கொள்வதைவிட என்னுடைய உடலில் வாளை பாய்ச்சிக்கொள்வதையே நான் விரும்புகிறேன்!” என்று கூறினார். அவர் தொலைநோக்கு பார்வைகொண்ட மனிதராக விளங்கினார், அவர்மீது அல்லாஹ்(ஸுபு) வின் அருள் ஏற்படுவதாக! ஏனெனில் கிலாஃபா அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் இவ்வாறுதான் நிகழ்ந்தது! வல்லரசுகள் கங்காணிகளாக செயல்படும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்! இல்லையில்லை! யூதர்களின் சட்டவிரோத அரசை பாதுகாத்து வருகிறார்கள்!

அன்றைய நாட்களில் பெரும் வல்லரசாக திகழ்ந்த பிரிட்டனின் குடிமகனாக இருந்த ஒருகயவன் 19ம் நூற்றாண்டியின் இறுதிவாக்கில் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சிலவற்றை வெளியிட்டபோது அதற்காக பிரிட்டன் லண்டனிலுள்ள தனது தூதரகத்தின் மூலமாக பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என்று கிலாஃபா அரசு நிர்பந்தம் செய்தது. மேற்கத்திய காஃபிர்களும் யூதர்களும் இன்று அல்லாஹ்(ஸுபு)வின் வார்த்தையாகிய அல்குர்ஆனை எத்தகைய கேள்விகளுக்கும் உட்படாமல் இழிவுபடுத்துகிறார்கள்! அல்குர்ஆனை அரசியல் சாஸனமாக எடுத்துக் கொள்ளக்கூடியதும் சங்கைமிக்க குர்ஆனை மிகச்சிறிய அளவிலோ அல்லது மிகத்தொலைவான நிலையிலோ இழிவுபடுத்த முனைந்திடும் காஃபிர் களுக்கு எதிராக அரசின் அத்தனை ஆற்றல்களை ஒன்றிணைத்து போரிடக்கூடியதும், முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணுமாகிய கிலாஃபா இல்லாததுதான் இதற்குஒரே காரணமாகும்!

இதுதான் கிலாஃபாவாகும்! இவர்கள்தான் அதன் நிழலுக்குகீழ் வாழ்ந்த முஸ்லிம்களாகும்! முஸ்லிம்களே! இவர்கள்தான் உங்களுடைய சகோதரர்கள், இவைகள்தான் அவர்கள் ஆற்றிய தீரமிக்க அருஞ்செயல்கள்! நீங்கள் அவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கிறீர்கள், எனவே அவர்கள் நடந்துசென்ற சத்திய பாதையில் நடந்து செல்வதற்கும் அவர்கள் பெற்றிருந்த கண்ணியத்தை பெற்றுக்கொள்வதற்கும் உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

இது இறுதி தருணத்திற்கு முந்தைய அழைப்பாகும்! அல்லாஹ்(ஸுபு)வின் அனுமதி கொண்டு உங்கள் எதிரிகளை முறியடிப்பதற்குரிய ஆற்றலை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்ற உண்மையின்பால் உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு நாங்கள் விழைகிறோம். காலனியாதிக்க காஃபிர் அரசுகள் பார்வைக்கு பலமுள்ளதாக தோன்றினாலும் உண்மையில் அவை பலவீன மானவையாகும். ஈமான்கொண்டுள்ள போர்ப்படைகள் எண்ணிக்கையிலும் ஆயுதத்திலும் குறைவாக இருந்தபோதும் உக்கிரமாக போரிடும் ஆற்றலை கொண்ட அதற்கு முன்பாக தீரமிக்க மனிதர்களை பெற்றிராமல் ஆயுதங்களை மட்டும் பெற்றுள்ள இராணுவங்கள் அனைத்தும் பலவீனமானவையே! இது நிராகரிப்பவர்களுக்கு எதிராக எண்ணற்ற போர்களை நிகழ்த்தி வெற்றிவாகை சூடிய கிலாஃபா வடிவமைத்த உண்மையாகும்! ஆகவே முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுவதற்கு போர்த்தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றில் மேம்பாடுகளை பெற்றிருப்பது மட்டுமே மேற்கத்தியர்களுக்கு போதுமானதாக இருக்காது ஏனெனில் எழுச்சிமிக்க உண்மையான அகீதாவை முஸ்லிம்கள் பெற்றுள்ளார்கள் அது அவர்களுக்கு மகத்தான போரிடும் ஆற்றலை வழங்கும்! அமெரிக்கா தலைமையிலுள்ள கொடுங்கோலர்கள் அதற்கு ஒருபோதும் ஈடுகொடுக்க முடியாது! எனினும் அல்லா‎ஹ்(ஸுபு)வின் அனுமதிகொண்டு கிலாஃபா அரசு உதயமாகும்போது இந்த உண்மையை அவர்கள் தங்கள் கண்களால் திண்ணமாக காண்பார்கள், இந்த கொடுங்கோலர்கள் தஞ்சம் புகுவதற்கு உள்ளபடியே எந்த நிலப்பரப்புகளும் மீதம் இருக்குமாயின் அதன்பால் அவர்கள் பின்வாங்கிச்செல்லும் வகையில் கிலாஃபாவின் ஆற்றல்மிக்க இராணுவம் வெற்றிக்குமேல் வெற்றியை குவித்தவாறு முன்னேறிச் செல்லும்!

وَلَتَعْلَمُنَّنَبَأَهُبَعْدَحِينٍ

“நிச்சயமாக சிறிது காலத்திற்கு பின்னர் இந்த உண்மையை நீங்கள் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்” (ஸாத் : 88)

இது இறுதி தருணத்திற்கு முந்தைய அழைப்பாகும்! உங்கள் ஆதரவை பெறும் பொருட்டு இந்த அழைப்பை உங்களை நோக்கி விடுக்கிறோம், எனவே உங்களுக்கு முன்னர் இந்த பணியில் இணைந்து கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் இணைந்துகொள்ளுங்கள். எங்கள் கரங்களை உங்களை நோக்கி நீட்டுகிறோம் எனவே அதை பற்றிக்கொண்டு அதிகாரம் பெற்றுள்ள மக்களுடன் இணைந்து கொள்ளுங்கள், அவர்கள் ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே எங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்துள்ளார்கள், ஏனெனில் கிலாஃபாவின் பயணக்கூட்டம் புறப்படுவதற்கு தயாராக இருக்கிறது அந்த பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்!

وَيَقُولُونَمَتَىهُوَقُلْعَسَىأَنْيَكُونَقَرِيبًا

“அது எப்போது நிகழும் என்று அவர்கள் வினவுகிறார்கள்!  ‘அது மிகச்சமீபமாகவே இருக்கிறதுஎன்றுநீர்கூறுவீராக!” (அல்இஸ்ரா : 51)

அல்லாஹ்(ஸுபு)வின் ஆதரவையும் அவனுடைய வாக்குறுதியையும் நாம் போதுமாக்கிக் கொண்டுள்ளோம்.

‎وَيَوْمَئِذٍيَفْرَحُالْمُؤْمِنُونَبِنَصْرِاللَّهِيَنْصُرُمَنْيَشَاءُوَهُوَالْعَزِيزُالرَّحِيمُ

“அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.‎அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உதவிபுரிகிறான்.அவன் மிகைத்தவனும் மிக்ககிருபை உடையவனுமாக இருக்கிறான்” (அர்ரூம் : 4, 5)

அல்லாஹ்(ஸுபு)வின் சாந்தியும் சமாதானமும்

உங்கள் மீது ஏற்படுவதாக! அஸ்ஸலாமு அலைக்கும்

வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு‎‎‎‎‎

 

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh